பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O தொட்டனைத்துறும் மணற்கேணி கெடுக உலகியற்றியான்' என்றால் அவன் பண்ண லேன்னு தெரிகிறது இல்லையா அறத்தாறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - - (குறள் 37) என்கிற குறளுக்கு ஏறிக்கிட்டுப் போறவன் புண்ணியம் பண்ணினவன், தூக்கிக்கிட்டுப் போறவன் பாவம் பண்ணினவன் என எழுதிட்டுப் போயிட்டான். நான் அதை மறுக்கிறேன். 19-வது வயசிலே இதை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதினேன். அது அல்ல பொருள். திருவள்ளுவர் ரொம்ப ஜாக்கிரதையாய்ச் சொல்கிறார். பல்லக்குத் தூக்கிட்டுப் போறவன் ஏறிட்டுப் போறவனை வைத்து இவர்களிடையே அறத்தாறு இது என்று சொல்லாதே என்று எழுதினேன். அதுதான் உரை. இப்போ அவன் புண்ணியம் பண்ணினவன். இவன் பாவம் பண்ணினவன் அதனாலே அவன் பல்லக்கைத் தூக்கிட்டுப் போறான் என்கிறதை நான் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. அவர் எங்கேயும் சொல்லலை. இப்போ இந்தக் குறளை எடுத்துக்கிட்டா அதற்கு அரண் என்று இதைச் சொல்லலாம். இவன் பிச்சை எடுக்கிறது இவன் தலையெழுத்து. அப்படித்தான் பிரம்மா எழுதியிருக்கிறான். அப்படின்னா ஒழிச்சுத் தொலையடா பிரம்மாவை. - கிருபானந்த வாரியார் ஒரு கதையைச் சொன்னார். ரொம்ப நல்லாயிருக்குது. அந்த நேரத்திலே பரந்து