பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தொட்டனைத்துறும் மணற்கேணி தோண்டுதல் நடக்கிறது. ஏன்? கம்பருக்கும், சேக்கிழாருக்கும் செய்ய வேண்டியதைச் செய்து முடித்து விட்டேன். தோண்டுதல்தான் என் வேலை. இப்போது ஊறும் என்று சொன்னானே, ஊறிச்சா? அப்படி எழுதினது தான் அந்தப் புத்தகம். எனக்குச் சமஸ்கிருதம் தெரியாது. தேவாரத்தைப் படித்தால், எல்லா தேவாரத்திலும் வேதம், வேதம் என்று... ஒருநாள் அப்படியே தலையிலே கைவச்சுண்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு நஞ்சுண்டன் என்று ஒரு நண்பர் ஒய்வு பெற்ற பேராசிரியர். வேத விற்பன்னர். அவர் வந்து பார்த்துட்டு என்ன அ. ச. ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க?' என்று கேட்டார். “நஞ்சுண்டா எனக்கு வயிற்றெரிச்சலா இருக்கு. நான் வடமொழி படிக்காம போயிட்டேன். இந்த வயசிலே என்ன பண்ணுவேன்? எல்லாத் தேவாரத்திலும் வேதம், வேதம் என்று வருது வேதத்தில் என்னதான் இருக்குதுனு - தெரியலை' என்றேன். அவர், 50 வருஷத்துக்கு முன்ன இப்படிக் கவலைப்பட்டா நியாயம். இப்பதான் எல்லாம் ஆங்கிலத்தில் வந்திருக்கே என்ன கவலை? என்று சொல்லி 30 புத்தகங்கள் கொடுத்தார். மூன்று மாதங்கள் படித்தேன். தேவை ஏற்படும்போது மூலத்தைப் பார்த்து விடுவோம். ராத்திரி 11 - மணிக்கு விவாதம் பண்ணு வோம். தீர்வு காண முடியாமல் திண்டாடுவோம். காலையில் எழுந்தப்புறம் குளிக்கிறது எல்லாம் கிடையாது. என் பழக்கமே வேறே. கடகட என்று எழுத