பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தொட்டனைத்துறும் மணற்கேணி தோண்டுதல் நடக்கிறது? நீங்க நினைக்கிற மாதிரி அல்லது பெரிய புராணத்தைத் தோண்டுதல் என்று இல்லை. ஏன் - எதுக்காக இங்கு என்னை உட்கார்த்தி வைத்திருக்கிறது. அதுவும் ஒரு விதமான தோண்டுதல் தான். எழுதி முடிச்சேன். முன்னே கம்பனைப் பற்றி எழுதினதும் இது மாதிரி தான். அதுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அப்போதான் நினைச்சேன். எப்போதோ 40 வருஷம் முன்னாடி யோக சுவாமிகள் சொன்னார் - கம்பனையும் சேக்கிழாரையும் வெட்டிப் நாமதானே புதைக்கணு மல்லோ? - இரண்டு பேருக்கும் செய்ய வேண்டிய கடமை. அந்த இரண்டு நூலும் என் படைப்பல்ல. தோண்டுதல் என்னுடையது. தண்ணி ஒடுவது அவனுடையது. அவ்வளவுதான். இந்த நிலைமை வருமேயானால் உலகம் போற்றிக் காப்பாற்றுகின்ற படைப்பை நம்மால் உருவாக்க முடியும். இப்போ ஊறும் என்று சொன்னானே - இது எழுதி முடிச்சிட்டியா. அது வரைக்கும் தான் ஊறிச்சா? குறளிலே பொருளதிகாரத்தில் ஒரு பகுதி. இவ்வளவு நடந்தும் அந்த ஆண்டவன் என்னைக் காக்கவே இல்லை. ருத்ரம் என்று ஒன்று உண்டு க்ருஷ்ண யஜுர்லே நாலாவது பிராமணத்திலே வருது. பூரீருத்ரம் என்று பெயர். அதைச் சொல்லித்தான் சிவன் கோயில்லே எல்லாம். அபிஷேகம் பண்ணுவான். அந்த ருத்ரத்தைப் படிச்சவுடனே எனக்கு வந்த கோபத்திலே எல்லாக் கோயிலில் இருக்கிற குருக்களையும் நிக்க வைத்துச் சுடனும்னு மனசிலே வந்தது. ஏன்னா, இந்த ருத்ரத்திலே,