பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 61 எல்லை ஒன்று இல்லை என்பதை எடுத்துச் சொல்ல வருகிறாராம். 'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர் ஆதியும் இல்லே; அந்தமும் இல்லே, நடுவும் இல்லே. ஒன்றுமே இல்லையா? ஒர் மும்மைத்தாய இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் இவை எல்லாவற்றையும் கடந்தது இப்போது மூலமும்... நடுவும் ஈறும் என்றபோது மூன்று பரிமாணங்களைப் பற்றிச் சொல்லியாச்சு. மூன்று காலம் என்கிறபோது காலம் என்னும் நாலாவது பரிமாணம் சொல்லியாயிற்று. 'மூலமும் நடுவும் ஈறும் இல்லது 'மும்மைத்தாய காலமும்’ என்றதால் நான்கு பரிமாணங்களும் சொல்லி யாச்சு - எல்லாவற்றிலும் இல்லை இல்லை என்று சொல்வதால் எல்லாம் ஒரு மறுப்பாகப் போய் விடு கிறது. புத்தமதக் கோட்பாடு போல. அதற்காக என்ன செய்கிறான் கம்பன்? உடன்பாட்டுப் போக்கில் 'கணக்கும் நீத்த காரணன் - என்று சொல்கிறான். எல்லா வற்றிற்கும் முதற் காரணன் - அடிப்படைக் காரணன் - அது என்னது? புரியாது. கைலாசத்தில் இருக்கு என்கிறான்; திருப்பாற்கடலில் இருக்கு என்கிறான். எல்லாத்தையும் விட்டுட்டு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து 'சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து'... அயோத்தி வந்தான் என்கிறான். -