பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

3. திருநந்தவன கைங்கர்யம்

7

கித்தது. நம்பெருமாளை ஸேவித்து மெய்ம்மறந்து நின்றவேதியர், அப்பெருமானைத் துதித்து ஆநந்தக் கடலில் ஆழ்ந்திருந்தார். ஸ்ரீரங்கநாதனும் விப்ரநாராயணரைக்குளிர நோக்கி அருள் புரிந்தார்.

அதுமுதல் விப்ரநாராயணர் ஸ்ரீரங்கத்திலேயே வாஸம் செய்யத் தொடங்கினார். எல்லாப் பாபங்களையும் போக்கும் மஹிமை வாய்ந்த திவ்ய ஸ்தலமன்றோ ஸ்ரீரங்கம்? விப்ரநாராயணருக்கு அழகிய மணவாளரிடத்தில் அளவு கடந்த பக்தி உண்டாயிற்று; அதனால் தான் அவர் எம்பெருமானுக்குத் தகுந்த திருப்பணி செய்துகொண்டு அவ்விடத்திலேயே வாஸஞ்செய்யத் தீர்மானித்தார்.

கடவுளுக்கு உகப்பான பணி யாதென்று ஆராய்ந்தார். முன்னம் கஜேந்த்ரர் செய்துவந்த புஷ்ப கைங்கர்யத்திற்கு உகந்து அவரைப் பகவான் பெரிய ஆபத்தினின்றும் காத்து நற்பதம் அளித்ததையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் துளஸீ கைங்கர்யம் செய்து வந்த பெரியாழ்வாருக்கு மஹாவிஷ்ணு அருள்புரிந்ததையும், தினந்தோறும் புஷ்பம் கொண்டு வந்து ஸமர்ப்பித்த ஸ்ரீமாலாகாரருக்கு க்ருஷ்ணன் காட்டிய கருணைத்திறத்தையும் விப்ரநாராயணர் நினைத்துத் தாமும் அப்படியே செய்து திருமாலின் க்ருபையைப் பெறத் தீர்மானித்தார். உடனே அத்திருப்பதியிலேயே அவர் ஒரு நந்தவனம் அமைத்து அதில் பல வகைப் புஷ்பச் செடிகள் வைத்து வளர்க்க ஆரம்பித்தார். மிகுந்த சிரத்தையோடு வேளை தவறாமல் நீர்ப்பாய்ச்சிக்களை யெடுத்துச் செடிகளைப் பூச்சிகள் பாழாக்காமல் இரவும் பகலும் ஓயாமல் காத்துவந்தார். ப்ரதிதினமும் மலரும் பூக்களை அழகாகக் கட்டி மாலையாக்கிக் கொண்டுபோய் ஸ்ரீரங்கநாதனுக்கு ஸமர்ப்பித்து ஸேவித்து வருவார்.