பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/11

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

தொண்டரடிப்பொடியாழ்வார்

சிறுவர்களே? நீங்களும் விப்ரநாராயணரைப் போல் உங்கள் வீட்டுத் தோட்டங்களில் துளஸீ, ரோஜா முதலிய புஷ்பச்செடிகளை வைத்து வளர்த்து மலரும் மலர்களைக் கடவுளுக்குச் சூட்டினால் கடவுளின் திருவருள் உங்களுக்கும் உண்டாகும். அதனால் உங்களுக்கு நல்லறிவு வளரும்; உங்களுடைய கல்வி செழிக்கும்; லக்ஷ்மியின் அருட்பார்வை கூடும். திரண்டசெல்வமும் நீண்டஆயுளும் பெற்று இன்பமாய் வாழ்வீர்கள். பகவானுக்கு நாம் செய்யக்கூடிய பணிகளிற் சிறந்தது இப் பணியல்லவா! அதனால் நாம்பெறக்கூடாத நன்மையும்உண்டோ? மலர்ந்த புஷ்பங்களைக் காணும்போது நமக்கு எவ்வளவு இன்பம் உண்டாகிறது? அவைகளினின்றும் வீசும் வாஸனையை நாம் எப்போதும் முகந்து அனுபவிக்க விரும்புகிறோமல்லவா! கடவுளுக்கும் புஷ்பங்களிடத்தில் வெகு ப்ரிய முண்டு. எவன் ஸந்தோஷமாய்ப் பக்தியுடன் தமது திருவடிகளில் புஷ்பங்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பிக்கிறானோ அவனிடத்தில் பகவானுக்கு அருள் உதிக்கும்.

அவர் நம்மிட மிருந்து பணமாவது சொத்தாவது விரும்பவில்லை. சுத்தமான மனத்தையும், மலராலும் நீராலும் புரியும் அர்ச்சனையையுமே அவர் பெரிதாக மதிக்கிறார். ஆகையால் இத்தொண்டினும் மேம்பட்டதிருத்தொண்டு வேறுஇல்லை.

4. தேவதேவியின் ப்ரதிக்னை

விப்ரநாராயணர் தமது கைங்கர்யத்திலேயே கருத் துடையவராய்ச் சோலையை வெகு ஜாக்ரதையோடுங் காத்து வந்தார். அச் சோலையின் சிறப்பை சோழ ராஜன் முதல் யாவரும் அறிந்து அவருடைய பக்தியைக் கண்டு அதிசயித்தார்கள்.