பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4.தேவதேவியின் ப்ரதிக்னை 9

இப்படி இருக்கையில் திருக்கரம்பனூர் என்னும் ஸ்தலத்தில் ஒரு வேசி இருந்தாள். அவளுக்குத் தேவ தேவி என்று பெயர். அவள் வெகுரூபவதி. அவளுடைய அழகைக் கண்டு சோழ ராஜன் மயங்கி யிருந்தான். தேவ தேவி ஒரு நாள் உறையூருக்குச் சென்று சோழ மன்னனிடம் தனக்கு வேண்டிய த்ரவ்யங்களும் ஆடையாபாணங்களும் பெற்று அவனிடம் விடைபெற்றுக்கொண்டு திருக்கரம்பனூருக்குத் திரும்பினாள்.

தேவ தேவி தன் தோழியருடன் திரும்பி வந்து கொண்டிருக்கையில் அவளும் ஸகிகளும் வெயிலின் கடுமை ஸஹிக்க முடியாமல் வருந்திக் களைப்புற்றனர்.விப்ரநாராயணருடைய சோலை வழியில் இருப்பதை அறிந்த தேவ தேவி தன் தோழிகளுடன் அச் சோலைக்கு வந்து சேர்ந்தாள்.

அச்சிங்காரத் தோட்டத்தைக் கண்டதும் அவளுக்கு உண்டான ஆச்சர்யத்தைச் சொல்லி முடியாது. அவள் தன் ஸகிகளை நோக்கி, “ஸஹோதரிகளே, நான் பெண்ணாய்ப் பிறந்தது முதல் இவ்வளவு நேர்த்தியான பூம்பொழிலைக் கண்டதேயில்லை. இந்த்ரனது கற்பகச் சோலையும் இதற்கு ஸமான மாகாது. நமக் குள்ள சிரமம் முழுவதும் இதில் கால் எடுத்து வைத்ததும் மாயமாய்ப் பறந்து விட்டதே! எத்தனைவகைப் பழமரங்கள்! புஷ்ப ஜாதிகள் எத்தனை! அவை வைக்கப்பட்டிருக்கும் ஒழுங்கையும் அழகை என்னென்று சொல்வது! இவ்வளவு ரமணீயமான தோட்டத்தைக் காத்து வளர்ப்பது எவ்வளவு அருமையான கார்யம்! நாம் இதில் சற்று நேரம் உலாவியிருந்து சிரமம் தீர்ந்தபின் புறப்படுவோம்‘என்று சொல்லி, எல்லாரையும் அழைத்துக் கொண்டே தோட்டத்திற்குள் நுழைந்தாள்.