பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தொண்டரடிப்பொடியாழ்வார்


ப்ராமணர் காஷாயம் தரித்துத் தேகமுழுதும் பன்னிரண்டு திருமண்காப்பும் விளங்கத் தம் கார்யத்திலேயே கண்ணுடையவராய், ஒருபுறத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டும் மண்ணைக் கொத்திக்கொண்டும் இருந்தார். அவர் பகவானுடைய நாமங்களை உச்சரித்துக் கொண்டே தம்முடைய வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தார். தேவதேவி அத்தோட்டம் முழுவதும் சுற்றிக் கொண்டே வந்து விப்ரநாராயணர் ஜலம் பாய்ச்சிக்கொண்டிருந்த இடத்தில் தன் தோழிகளுடன் வந்துநின்றாள்.

தேவதேவி ப்ராமணரின் ஸாத்விகவேஷத்தைக்கண்டு ஆச்சர்யப்பட்டுத் தன் தமக்கையை நோக்கி, “ஸஹோ தரியே! இந்தப் பார்ப்பானின் செருக்கை என்னென்று சொல்வது? என்னுடைய அழகைக்கண்டு மன்னாதிமன்னர் களும் என்னிடம் மயங்கிக்கிடக்கிறார்களே! அப்படி யிருக்க, நான் இவர் எதிரில் நின்றிருந்தும் என்னைக் கண் கெண்டுத்தும் பாராமல் இருக்கிறாரே! இவருக்கு என்னிடம் இவ்வளவு அலக்ஷ்யமா? இவரை எப்படியாவது நான் வசப்படுத்தாமல் விடுவதில்லை” என்று கூறினாள்.

மூத்தவள் தேவதேவியின் வார்த்தைகளைக் கேட்டு உடல் குலுங்க நகைத்து, “தேவதேவி! அவரை யாரென்று நினைந்தாய்? அப் பாகவதரிடம் உன் ஸாமர்த்யம் சிறிதும் செல்லாது. வீண் ஆசையை விடு. அவரைக் கெடுக்க முயல்வதும் மஹாபாபமாம். அவருடைய ப்ரதாபமானது ஊர்முழுதும் பரவி யிருக்கிறது. அவர் பெரிய துறவி. அந்த ஸாத்விக வேதியரை நீ நெருங்கினால் அழிவது திண்ணம்” என்று கூறினாள்.

தேவதேவிக்குத் தன்னைப்போல் அழகிகள் உலகில் கிடையாதென்ற மமதை மிகுதியும் உண்டு. தன்வலையில்