பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.தேவதேவியின் சூழ்ச்சி

11

சிக்காத ஆடவரும் உண்டோ என்று நினைத்து அவள் மிகவும் இறுமாந்திருந்தாள். தமக்கையின் மொழிகளைக் கேட்டதும் அவளுக்குக் கோபம் பொங்கிற்று. கண்களில் தீப்பொறி பறக்கத் தேவதேவி தன் ஸஹோதரியை நோக்கி, “இதோபார்! நான் இவனை அடிமையாக்கி விடுகிறேன். அவனை மயக்கி என் வசப்படுத்தி விட்டால் நீ எனக்கு ஆறுமாதகாலம் அடிமையாயிருந்து உழைக்க உடம்படுகிறாயா?” என்றாள்.

மூத்தவளும் ப்ராமணருடைய மஹிமையை அறிந்தவ ளாகையாலே தேவதேவியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவளை நோக்கி, “நீ உன் முயற்சியில் தவறினால் எனக்கு ஆறுமாதகாலம் அடிமையாக வேண்டும்” என்று கூறினாள். தேவதேவியும் அவ்வாறே செய்ய. உடம்பட்டாள்.


5. தேவதேவியின் சூழ்ச்சி

தேவதேவி மகா கெட்டிக்காரி. தான் ஒன்றைச் செய்ய நினைத்தால் அதைச்சாதியாமல் விடமாட்டாள். பெண்ணாய் இருந்தும் அவளுக்குத் துணிவும் தைர்யமும் மிகுதியும் உண்டு. எப்படியாவது விப்ரநாராயணரின் தூயமனத்தைக் கெடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டாள்.

அவள் தன் ஸஹோதரி முதலியவர்களை விடை கொடுத் தனுப்பிவிட்டாள். தன் நகைகளையும் பட்டாடைகளையும் களைந்து தன் ஸகிகளிடத்தில் கொடுத்தனுப்பி விட்டுத் தேவதேவி காஷாயந் தோய்த்த சேலை யொன்றைக் கட்டிக் கொண்டு விப்ரநாராயணர் பக்கத்தில் போய் நின்றாள். அப்போதும் அவர் அவளைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை.“இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா” என்பது