பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6. தேவதேவியின் வெற்றி

13

பெரியோர்களையடைந்து அவருக்குத் தொண்டு புரிதற்கன்றி இத்தேஹம் எதற்கு ஏற்பட்டிருக்கிறது? ஆகையால் எனக்குத் தத்வோபதேசம் செய்து நான் உய்யும்வகையை அருள்புரியவேண்டும். தேவரீரிடும் பணிகளைச் சிரஸா வகித்துச் சிரத்தையோடு அவற்றைச் செய்து, தேவரீர் உண்டு எறிந்த மிச்சத்தைத் தின்று நற்கதி அடைய விரும்புகிறேன்” என்று கூறினாள்.

அவளுடைய கபட எண்ணங்களைச் சிறிதும் அறியாத விப்ரநாராயணர், அவளுரையை மெய்யென நம்பி, அவளுடைய பக்தியையும் விரக்தியையும் புகழ்ந்து கொண்டாடி அவளை நோக்கி, “பெண்ணே! உன் எண்ணம் அது வாயின், நீ இச்சோலையில் இருப்பதற்கு எனக்குச் சிறிது ஆக்ஷேபம் இல்லை. இதுவரை செய்து வந்ததுபோல் நம் பெருமாளுக்குப் பூத்தொண்டு செய்யும்விஷயத்தில் எனக்கு உன்னால் இயன்ற உதவியைச் செய்து வரலாம்” என்று நியமித்தார். தேவதேவியும் தன் எண்ணம் ஈடேறும் நாள் குறுகிய தென்று களித்து ஸமயம் நோக்கி யிருந்தாள். அவள் முன் போலவே மறையவர்க்குத் திருத்தொண்டுகள் புரிந்து அவரை ஸந்தோஷப்படுத்தி வந்தாள். ஸ்ரீரங்க நாதனுக்குப் புஷ்ப கைங்கர்யம் முன்னிலும் வெகு சிறப்பாக நடந்து வந்தது.


6.தேவதேவியின் வெற்றி இங்ஙனம் பல மாதங்கள் சென்றன. வர்ஷாகாலங் குறுகியது. ஒரு நாள் ஆகாயமுழுதும் மேகங்கள் குழுமிப் பேரிடியையும் மின்னலையும் உண்டாக்கிச் சற்று நேரத்துக்குள் பெருமழையாகப் பெய்யத் தொடங்கின. எங்கும் இருள்கவிந்தது. கடுமழைக் கஞ்சி எல்லாவுயிர்களும் ஒடியொளித்தன.