பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. தேவதேவியின் வெற்றி

15

மொழிகளால் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தாள். பெண் வலைப்பட்டோர்க்கு அறிவு மழுங்கு மன்றோ? அவரும் தம் நிலையை மறந்து தேவதேவியோடு மகிழ்ந்திருந்தார். அதுமுதல் அவருடைய சீலமும் ஒழுக்கமும் குறைந்து கொண்டே வந்தன. அவருடைய தவநெறியுங்குலைந்தது. அவர் தாம் செய்துவந்த திருத்தொண்டையும் மறந்தார். அவர் தேவதேவியின் காதல் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தார். தேவதேவியும் தன் சபதம் நிறைவேறிய தென்று மனங்களித்தாள்.

அறிவு நிறைந்த பக்தர்களின் மனமும் நாளடைவில் மாறித் தீயவழியிற் செல்லுதல் கூடும் என்பதற்கு, விப்ரநாராயணரின் சரித்ரமே ஒரு த்ருஷ்டாந்தமாகும். நம் முடைய மனத்தை ஒரு நிலையில் நிறுத்துவது மிகவுங்கஷ்டம். பாபச் செய்கைகளைப் பின்பற்றிக் கேடுறுவது எளிது. நற்கருமங்களைக்கொண்டு மேன்மையடைதல் அரிது. ஆகையால், நாம் இயன்றவரை தீக்குணமுடையோரின் உறவையும் தீய விஷயங்களில் உண்டாகக்கூடிய விருப்பத்தையும் விலக்கவேண்டும். தீயோரின் இணக்கம் எளிதிற் கூடும். கூடியபின் அதனால் அடைவது தீமையே அன்றி வேறன்று. ஒருவன் நாசம் அடைவதற்கு முக்ய காரணம் துர்ஜன ஸஹவாஸமேயாம். நல்லவர்களுடைய நட்புப் பெறுவது மிகவும் அருமை. அரி திற் கூடும் நல்லோரின் உறவு திடப்பட்டால், பின்னால் ஒருவன் பெறற்கரும் நன்மைகளை அடைந்து சிறப்படைவான். ஆகையால் தான் இணக்கமறிந் திணங்கவேண்டு மென்று ஆன்றோர் கூறுவர். நல்லோரைக் கூடி ஒருவன் அடையக்கூடிய நன்மையையும், தீயோரைச் சேர்ந்து ஒருவன் அடையும் கேட்டையும் நோக்கியே,