பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16 தொண்டரடிப்பொடியாழ்வார் 6 கொண்டாடிப்பொடியாழ்வார்‌

நல்லாரைச்‌ காண்பதுவும்‌ நன்றே நலமிக்க
நல்லாத்சொற்‌ கேட்பதுவும்‌ நன்றே - நல்லார்‌
குணங்க ளுரைப்பதுவும்‌ நன்றே அவமோடு
இணங்கி யிருப்பதுவும்‌ நன்று.


தீயாரைச்‌ காண்பதுவுக்‌ தீதே திருவற்ற
தீயார்சொற்‌ கேட்பதுவுக்‌ தீதே - தீயார்‌
குணங்க ளுரைப்பதுவு்‌ தீதே அவரோடு
இணங்கி யிருப்பதுவுக்‌ தீது.

என்று பெரியோரும் கூறி யிருக்கிறார்கள். தொண்டர்களுட் சிறந்த விப்ரநாராயணரே துர்ஜன ஸஹவாஸத்தால் மதி இழந்தாரென்றால், நம்மைப்போன்ற ஸாதாரண மனிதர்களின் நிலையைப்பற்றிக் கேட்பானேன்? ஸ்ஹவாஸ்தோஷம் பொல்லாதென்று நமக்கு அறிவுறுத்த வேண்டியே, பகவான் மஹா விரக்தரான விப்ரநாராயணரும் தேவதேவியை விரும்பும்படி ஸங்கல்பித்தார்.

7. தேவதேவியின் பிரிவும் ப்ராமணரின் வருத்தமும்

தேவதேவி ப்ராமணரோடு சில காலம் ஸுகித்திருந்தாள். அவர் தாம் அரிதில் தேடிய பொருள்களை யெல்லாம் அவளுக்கு ஒப்புவித்துவிட்டு அவளுடைய காதலில் மயங்கிக் கிடந்தார். அவர்கையில் பொருள் அபரிமிதமா யிருந்த வரையில் தேவதேவி அவரை விட்டு அகலாமல் அவருக்கு உண்மையில் பாடுபடுபவள்போல் நடித்து வந்தாள். பெண்களுக்கிட்ட போன், அன்றே அழியுமன்றோ? அவருடைய கைப் பொருளும் வெகு சீக்ரத்தில் கரைந்துவிட்டது. அதுமுதல் வேசையின் அன்புங் குறைந்தது. அவள் அவரைக் கீழ்மைப்படுத்தத் தொடங்கினாள். அவரிடம்