பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.தேவதேவியின் பிரிவும் ப்ராமணரின் வருத்தமும் 17 அவளுக்கிருந்த மதிப்பும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது, கைப்பொருளில்லாதவனை இவ்வுல கில் ஒருவரும் மதியாரன்றோ? 'கல்லானே யானாலுங் கைப்பொருளொன் நுண்டாயி னெல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வ- ரில்லானை யில்லாளும் வேண்டாண்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல்' என்று சான்றோர் கூறியிருப்பதும் இது பற்றியே யன்றோ? கடைசியில் அவரிடமுள்ள சொத்து முழுதும் தன் கைக்குச் சேர்ந்தபின் அவள் அவரைப் புறக்கணித்துப் போய் விட்டாள். விப்ரநாராயணருக்கோ அவளைப் பற்றிய ஏக்கம் நீங்கவில்லை.அவர் அது முதல் பித்தர் போல் ஆனார். ஊணையும் மறந்தார். அவர் அவளில்லஞ் சேர்ந்து அவ் வீட்டுத்திண்ணையில் இராப்பகல் ஒபாது காத்துக்கிடந்தார். ஆனால் அவ்விலைமகளோ அவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஙன் செய்வார் பாபம்! பெண்களின் மனமோ கல் லைப்போற் கடினமானது. விப்ரநாராயணர் அவளை எவ் வளவு கெஞ்சிக் கூப்பிட்டும் அவள் அவரை லக்ஷ்யஞ்செய் யவேயில்லை. பணமிருந்தால் வெகு ப்ரீதியுடையவள்போல் பாசாங்கு செய்வாள். ப்ராமணருக்கு இப்போதேனும் நல்லறிவு வந்ததோ? அவருக்கிருந்த அஞ்ஞாமை அவரை உண்மை அறியவொட்டாமல் தடுத்தது. அவர் அவள் வீட்டுத் தெருவிலேயே காத்துக்கிடந்தார். அவருக்கிருந்த வருத்தம் இவ்வளவென்று சொல்லி முடியாது. அவரு டைய தேகம் இளைத்துத் துரும்புபோல் வாடியது. 2