பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொண்டரடிப்பொடியாழ்வார்



1.விப்ரநாராயணரின் இளமைப் பர்வம்

முற்காலத்தில் தென் இந்தியாவில் மூன்று பெரிய ராஜ்யங்கள் செல்வத்திலும் நாகரிகத்திலும் கல்வியிலும் மிகவும் சிறப்படைந்திருந்தன. அவைகளை அரசாண்ட மன்னர் சேர, சோழ, பாண்டிய ரென்னும் மூன்று வம்சத்தவர்கள். அவர்களின் பராக்ரமத்தையும்,அவர்கள் நடத்திவந்த அரசியற் சிறப்பையும் அக்காலத்தில் விளங்கிய அநேககவிகள் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

அம் மூன்று நாடுகளில் நீர்வள நிலவளங்களால் பெருமையடைந்திருந்தது, சோழ நாடாகும். அந்நாட்டிலேதான் கல்வியும் பக்தியும் நிறைந்த சான்றோர் பலர் வளித்து வந்தார்கள்.அந்நாடு முழுவதும் அறச்சாலைகளும், வித்யாசாலைகளும், தேவாலயங்களும் நிறைந்திருந்தன. அந்நாட்டின் நகர்கள் கண்ணைப் பறிக்கும் அழகையுடையனவாய்ப் பொலிவுபெற்றிருந்தன. அந்நகர்களின் உந்நதமான மாளிகைகளுடன் கூடிய வீதிகளும், அவற்றைச் சுற்றி இயற்கையாய் அமைந்துள்ள சோலைகளும்