பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I. விப்நாராயணரின் இளமைப் பர்வம்

3


மகா விஷ்ணுவின் திருவாபரணங்களுள் வைஜயந்தி என்னும் பெயர் வாய்ந்த வநமாலை ஒன்று. விப்ரநாராயணர் அந்த வநமாலையின் அம்சமாகப் பூலோகத்தில் வந்து அவதரித்தார். அக்குழந்தையைப் பெற்றோர் சீராட்டிப் பெருமையோடும் வளர்த்து வந்தார்கள். அந்த ஸுந்தர குமாரருக்கு ஐந்து வயதாயிற்று. தந்தையார் தமது அருமைத் திருமகனை அறிவும் ஒழுக்கமும் நிறைந்த ஆசிரியரைத் தேடி அவரிடம் கல்வி பயிலும்படி ஒப்புவித்தார். ஏழாவது பிராயத்தில் விப்ரநாராயணருக்கு உபநயனச் சடங்கும் நிறைவேறியது. அப்பால் அவர் தம்மாசிரியரிடம் கற்கவேண்டிய அற நூல்கள் யாவற்றையுங் கற்று அவற்றில் வல்லவரானார். அக் கும்ரனைக் கண்டோர் யாவரும், “இவன் நற்குணக் குன்று; கல்விக் களஞ்சியம்; இவனைப்போலும் உலகிற் பிள்ளைகள் உண்டோ? இப்புத்ர ரத்னத்தைப் பெறுதற்குத் அவர் தாய்தந்தையர் என்ன நோன்பு நோற்றார்களோ!” என்று புகழ்ந்து கொண்டாடினார்கள். அடக்கம், விநயம், பொறுமை முதலிய ஸத்வ குணங்கள் அவரிடம் தலையெடுத்து விளங்கின.ஞானமும், பொறுமையும், குணமும், திறனும் ஒருங்கே அமைவது அருமை அருமை! என்று அதிசயிக்காதவர் கிடையாது, வேதங்களையும் மற்று முள்ள கலைகளையும் நன்றாய் உணர்ந்திருந்தார். அவர் பெற்றிருந்த ஞானமுதிர்ச்சிக்குத் தக்கபடி பகவானிடத்தும் பாகவதரிடத்தும் விசேஷ பக்தியுடையவராய் விளங்கினார்.

பரமபதத்தில் நித்யஸூரிகளோடு சிறப்புடன் வீற்றிருக்கும் எம்பெருமான் விப்ரநாராயணரை ஆட்கொள்ளத்திருவுளம் பற்றினார். தமது கணநாதரான ஸேனை முதலி யாரைத் திருமண்டங்குடிக்குப்போய் விப்ரநாராயணருக்குத் திருவிலச்சினை தரிப்பித்து அவரை வைஷ்ணவராக்கி