பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தொண்டரடிப்பொடியாழ்வார்

அவருக்கு மந்த்ரார்த்தங்களை உபதேசித்து வரும்படி கட்டளையிட்டு அனுப்பினார். விஷ்வக்ஸேநரும் பரமபதநாதனுடைய திருவுளப்படியே திருமண்டங்குடிக் கெழுந்தருளி விப்ரநாராயணருக்குக் க்ருபையோடும் திருமந்த்சத்தின் பொருளை உபதேசித்து மறைந்தார்.


2. விப்ரநாராயணரின் விரக்திநிலை

மஹா ஞானியாய்த் தம்மிலும் மிக்கரில்லை யெனும் பெருமை வாய்ந்த விப்ரநாராயணர் விவாஹப் பர்வத்தினை யடைந்தார். பெற்றோர் தம் புதல்வருக்கு நற்குலத்தில் பிறந்த ஓர் அழகியை விவாஹம் முடித்துவைக்க நிச்சயித்தனர்.

பெற்றோரின் உள்ளக் கருத்தை அறிந்த விப்ரநாராயணர் ஸமயம் நோக்கிக் காத்திருந்து தமது பிதாதனித்திருந்த காலத்தில் அங்குச் சென்று அவருடைய திருவடிகளில் பணிந்து நின்று வெகு விநயத்துடன் அடியில் வருமாறு விண்ணப்பித்துக்கொண்டார்:

‘தந்தையே! உலகில் மக்கள் தமது மாதா பிதாக்களால் அடையும் நன்மைகளைவிடப் பன்மடங் கதிகமான நன்மைகளை நான் தேவரீரால் பெற்றிருக்கின்றேன். மனிதராய்ப் பிறந்தோர் விதிவிலக்குக்களை அறிந்து நற்கதி அடைதற்கு ஸாதனமா யுள்ளது கல்வியாகும். கல்வி யில்லாதவன் பிறவிப்பயனை அடைதல் அரிது. தேடுதற் கரிய கல்விப்பொருளைக் கடவுளின் அருளாலும் நீங்கள் புரிந்த நல்லறத்தின் சிறப்பாலும் நான் பெற்றிருக்கிறேன். அக்கல்வியே எனக்கு உற்றதுணையாய் இருந்து நான் பகவானை வணங்கி நல்வழியில் நின்று முடிவில் அவனது திருவடிகளை அடைவதற்கு வேண்டிய நலம்