பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.விப்ரநாராயணரின் விரக்திநிலை

5

புரிவதாகும். தேவரீர் இப் பேருபகாரம் செய்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன்!

நான் சில நாளாய்க் கொண்டிருக்கும் விருப்பம் ஒன்றுண்டு. அதைத் தேவரீர் தயை புரிந்து ஈடேற்றி வைக்கவேண்டும். திவ்ய ஸ்தலங்கள்தோறும் யாத்ரை செய்து ஆங்காங்கு உள்ள எம்பெருமான்களை ஸேவிக்க விரும்புகிறேன். தேவரீர் அடியேனிடம் அருள்காட்டி அநுமதி அளித்தால் என் விருப்பம் நிறைவேறும்.'

இவ்வாறு தம்மை ப்ரார்த்தித்த மைந்தரைத் தந்தையார் அன்புடன் நோக்கி, ‘உன் குணத்திற்கு ஏற்ற புத்தியே உனக்கு அமைந்திருத்தலைக் கண்டு மன மகிழ்ந்தேன். ஆயினும், நான் உனக்குச் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்து கொண்டால் எங்களுக்கு ஸந்தோஷம் உண்டாகும். உன்னை எவ்வளவு அருமையாய் வளர்த்து வந்தோமென்பதை நீ அறிவையன்றோ? ஆகையால் நாங்கள் உன்னைப் பிரிந்து ஒரு நாளாயினும் உயிருடன் இருக்க ஸம்மதிக்க மாட்டோம். நீ இங்கிருந்தபடியே பரந்தாமனை வழிபடுவதற்கு வேண்டிய ஸௌகர்யங்களைச் செய்து வைக்கிறேன். குடுமபத்தில் இருந்துகொண்டு இல்லறங்களைச் செவ்வையாய்ச் செய்யவேண்டு மென்பதே இறைவனுடைய கட்டளையாகும். அதற்கு மீறி நடத்தல் சரியன்று. ஆதலால் உனக்கு இசைந்த ஸுந்தரியை விவாஹம் செய்து கொண்டு, வீட்டில் இருந்தபடியே பகவானை ஆராதித்துவா. பகவானது அருளும் எளிதில் கைகூடும். இதற்காக நீ ஊரூராய் ஓடித்திரிந்து அலையவேண்டாம்' என்று கூறினார்.

விப்ரநாராயணருடைய மனமோ ஒரே நிலையில் நின்று விட்டது. அவருக்குள்ள மனவுறுதியைத் தேவர்களாலும் கலைக்க முடியாது. அவர் விவாஹத்தை வெறுத்