பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தொண்டாடிப்பொடியாழ்வார்

தார். ஸ்ம்ஸாரக் கடலில் அழுந்தியவன் அதன் கரையை அடைதல் அஸாத்யமென்று அவர் எண்ணினார். பகவானைத் தொழுது நலமடைதற்குக் குடும்பம் ஒரு பெருந்தடை என்று அறிந்தார். தன் இஷ்டப்படிக் கடவுளை த்யானிப்பதற்கு ப்ரதிகூலமா யிருக்கும் ஸம்ஸாரத்தில் சிக்கித் துன்பத்தை அனுபவிக்க அவர் விரும்பவில்லை. ஆகையால், அவர் தம் தந்தையாரிடம் தமது முடிவான தீர்மானத்தை வெளியிட்டு அவர் எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் கேளாமல் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டு விட்டார்.


3. திருநந்தவன கைங்கர்யம்

விப்ரநாராயணர் ஸ்ரீரங்க நாதாது அற்புத மூர்த்தந்தை மனத்தில் த்யானித்துக் கொண்டே சென்றார். அவரது உள்ளம் நிஷ்களங்கமாயிருந்தது. அரங்க நகர் சென்று அங்கு தாம் காணப்போகும் அருங்காட்சியை நினைந்து நினைந்து உள்ளுருகினார். ஸ்ரீரங்கம் சென்று அரவணையில் பள்ளிகொண்டு எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாளரை ஸேவிக்கும் பாக்யம் தமக்குக் கிடைத்ததற்காக அவர் களிப்படைந்தார்.

மறையவர் அத் திவ்யத் திருநகரை அடைந்தார். முறைப்படி சென்று கோயிலுட்புகுந்து ஸந்நிதி அடைந்து ஸாஷ்டாங்கமாகத் தண்டனிட்டு வணங்கி நின்றார். திரு வநந்தாழ்வான்மீது எம்பெருமான் பிராட்டி ஸமேதராய் வெகு சிறப்புடன் வீற்றிருக்கும் திவ்யமங்கள விக்ரஹத்தின் திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஸேவித்தார். அவரது இரண்டு கண்களினின்றும் ஆதந்த வருவி சொரிந்தது. அவரது மெய் சிலிர்த்தது. ரோமம் புள