பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

(காசைஆடை-கல்லாடை (காஷாயம்); மூடிமறைத்து; தானவன்-அரக்கன்

இராவணன்) ; நம்ப-சங்கற்பித்த வேய்-மூங்கில், மடவார்-பெண்கள்; ஏச -

பரிகசிக்க} என்பது முதல் பாசுரம். முன்னிரண்டடிகளால் இராமாவதார நிகழ்ச்சியினையும், பின்னிரண்டடிகளால் கிருஷ்ணாவதார நிகழ்ச்சியினையும் அநுசந்திக்கின்றார் ஆழ்வார். மாயமான வடிவு கொண்டு மாரீசன் இராமனையும் இலக்குவனையும் பிரித்த காலத்தில் இராவணன் சந்நியாசி கோலத்துடன் சீதாபிராட்டி இருக்கும் இடம் வந்து பிட்சை கேட்டு அவளுடைய வடிவழகைக் கண்டு காதல் கொண்டதும், தன் செல்வச் சிறப்பையும், வெற்றிச் சிறப்பினையும் விரிவாகச் சொல்லித் தன்னைக் கணவனாக ஏற்றுக்கொள்ளுமாறு பிதற்றியதும், அதனைச் செவிமடுத்த பிராட்டி மிக்க சினங்கொண்டு அவனை நோக்கி பல அவமானச் சொற்களைச் செப்பியதும், பின்பு இராவணன் தன் உண்மை உருவத்தைக் காட்டிப் பிராட்டியைத் தேரேற்றிக் கொண்டுபோய் இலங்கையில் சிறைவைத்ததும், இதுவே காரணமாக அவன் நாசம் அடைந்ததுமான வரலாறு முன்னிரண்டடிகளில் குறிப் பிடப்பெற்றுள்ளது. கண்ணன் திருவாய்ப்பாடியில் திருவிளை யாடல்கள் செய்தருளுங்காலத்து ஆய்ச்சியர் கைப்பட்ட வெண்ணையைக் களவாடி அமுது செய்ததும், அந்தக் களவுத் தொழில்களை அவர்கள் எடுத்துக்காட்டிக் கண்ணனை எள்ளி நகையாடியதுமான வரலாறு பின்னிரண்டடிகளில் காட்டப் பெற்றுள்ளது. இத்தகைய வீரனும் எளியனுமான எம்பெரு மானே திருவெவ்வுள்ளுரிலே திருக்கண் வளர்ந்தருள்கின்றதாக ஆழ்வார் திருவுள்ளங் கொள்ளுகின்றார்.

அடுத்த பாசுரத்தில் இராமாவதாரச் செயல் ஒன்றையே பேசி அநுபவிக்கின்றார் ஆழ்வார்.

“தைய லாள்மேல் காதல்செய்த

தானவன் வாள்.அரக்கன் பொய்யி லாத பொன்முடிகள்

ஒன்பதோ(டு) ஒன்றும்.அன்று செய்த வெம்போர் தன்னில்அங்(கு)ஓர்

செஞ்சரத் தால்உருள எய்த எந்தை எம்பெருமான்

எவ்வுள் கிடந்தானே.”

11. பெரி. திரு. 2.2 :2.