பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வுள் கிடக்கும் பெருமலை 103

எம்பெருமான்’ என்கின்றார். பாலனாகி ஏழுலகினையும் திருவமுது செய்து ஆலிலைமேல் பள்ளிகொண்டவனும் அவனே.” அந்த எம்பெருமான் பரத்துவமும் செளலப்பியமும் வாய்ந்த புருடோத்தமன். ‘நம்பி! சோத்தம்’ என்ற தொண்டர்களால் அழைக்கப் பெறும் உயிர்த் தோழன். இப்படி எளியனாக அழைக்க உரியவனாக இருப்பினும் இவன் சாதாரணமானவன் என்று கருதுதல் வேண்டா. தேவர்களுக் கெல்லாம் மூத்தவன் என்றும், முக்கண்ணனுக்கு அந்தர்யாமியாக இருந்து செயலாற்றுபவன் என்றும் உண்மையையறிந்த முனிவர்களால் தொழுதேத்தப் பெறுகின்றவன் இவனே.” செயற்படும் பொருள்களையெல்லாம் தனக்கு உடலாகக் கொண்டு தான் அவற்றுக்கு ஆன்மாவாக இருப்பவன் இவனே. உலகங்களைப் படைத்த நான்முகனையும் படைத்தவன் இவனே. சாம வேதத்தால் பிரதி பாதிக்கப்பெற்றவனும் இவனேயாவான். தனது திருமேனியில் ஒருபக்கத்தில் இருக்கும் சிவபிரானும் உலகளந்த எம்பிரானின் திருவடிகளைத் தன் தலைமேல் சூடிக்கொண்டுள் ளான்.’ மேலும் இவனே,

“முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன், பூவைவண்ணன் அண்ணல் புண்ணியன், விண்ணவர்கோன் தனியன்,சேயன் தான்ஒருவன்

ஆகிலும்தன் அடியார்க்கு இனியன், எந்தை எம்பெருமான்.”

(புனிதன்-தூய்மையானவன்; தனியன்-தன்னேர் இல்லாதவன்; சேயன் - எட்டாதவன்; இனியன்-ஆராவமுது)

பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்று தங்கி வாழும் திருமார்பையுடையவன்; நீலமேனி சாமள வண்ண னாகிய இவன் தேவேந்திரனுக்கும் நாதன்.” இத்தகைய பெருமானே அன்பர்கட்குச் சேவை சாதிப்பதற்காகத் திரு எவ்வுள்ளில் வந்து கிடக்கின்றான்.

13. பெரி. திரு. 2.2:4. 14. பெரி. திரு. 2.2:5 15. மேலது. 2.2:6 16. மேலது - 2.2:7 17. மேலது - 2.2:8 18. மேலது. 2.2:9