பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் எழுந்தவண்ணம் திருஎவ்வுள்ளுரை வந்தடைகின்றோம். நீர்வளமும் நிலவளமும் சூழப்பெற்ற ஊர் அது. இந்த வளங்களைக் காணும் நாம்,

‘நீலம் ஆர்வண்டு) உண்டுவாழும்

நெய்தல்.அம் தண்கழனி ஏலம் நாறும் பைம்புறவில்

எவ்வுள்’

(நீலம்-நெய்தல்பூ, ஆர்-படிந்த உண்டு-தேனினைப் பருகி, அம்-அழகிய;

தண் - குளிர்ந்த, கழனி-வயல்; ஏலம்-மணம்; நாறும்-கமழ்கின்ற; பைபுறவு - பரந்த சோலைகள்)

என்ற ஆழ்வாரின் பாசுரப் பகுதியைச் சிந்திக்கின்றோம்.

பேருந்தினைவிட்டு இறங்கி ஹ்ருத்தாப நாசனி (மனநோய் நீக்கி) என்ற குளத்தில் கை கால்கள் அலம்பி தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு திருக்கோயிலினுள் நுழைகின் றோம். முதலில் ஓங்கி உயர்ந்த கொடிமரம் நம் கண்ணைக் கவர்கின்றது. அடுத்து அரங்க மண்டபத்திற்கு வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் பெரிய திருவடியைச் சேவிக்கின்றோம். துவாரபாலகர்களின் அனுமதிபெற்று உள்ளேசென்றால் திருவெண்ணாழி பிரதட்சினத்தைக் காண்கின்றோம். தல புராணத்தில் கூறப் பெற்றுள்ள செய்திகள் யாவும் ஒவிய வடிவில் தீட்டப் பெற்றுள்ளமையைக் கண்டு மகிழ்கின்றோம். இந்த இடத்தில் எம்பெருமான் திருமஞ்சனம் (நீராட்டு) கண்டருளு கின்றார். இதனையடுத்து வெள்ளிக் கதவுடன் கூடிய அர்த்த மண்டபத்தைக் காண்கின்றோம். இதனை ‘மஞ்சக் கட்டு’ என்றும் வழங்குகின்றனர். நாடோறும் இரவு வேளையில் இவ்விடத்தில் தான் மஞ்சம் சமர்ப்பிக்கப் பெறுகின்றது.

இதனை அடுத்து அந்தராளம் (கருவறையின்) அருகில் சென்றால் கிழக்குநோக்கிய திருமுகமண்டலம்கொண்டு சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமாமன் எவ்வுள் கிடந்தானைக் (மூலவர்) கண்டு வணங்குகின்றோம். ஆழ்வார் பாசுரங்கள் பத்தும் நம்மிடற்று ஒலியாக வெளிப்படுகின்றன. எம்பெருமான் சாலிஹோத்ர முனிவர் தலையில் தம் வலது திருக்கையை வைத்துக்கொண்டு ஞான முத்திரையுடன் நான்கு மறைகளையும் அருளுகின்றார். மூவருக்கு எதிரில் முன்புறமாக

19. மேலது - 2.2:5