பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

றோம். இதனால் இந்த வூருக்கு இலக்குமி பொருந்திய தலம் எனப் பொருள்படும் திருநின்றவூர் என்ற பெயர் ஏற்பட்டதோ என்ற ஊகத்தில் இறங்குகின்றோம்.

இந்தத் தலத்திற்கு எந்த ஆழ்வாரும் வந்து இத்தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்யவில்லை. எண்பத்தாறு திவ்விய தேசங்களைச் சேவித்த திருமங்கையாழ்வார் கூட இங்கு வராதது ஏனோ என்று சிந்திக்கின்றோம். ஆயினும், இந்த ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்தவூர் எம்பெருமானுக்குப் ‘பத்தராவிப் பெருமாள்’ என்ற பெயரும் உண்டு என்று கேள்வியுற்றிருக்கின்றோம். பக்தர்களின் உயிருக்கு உயிராய் இருப்பவர் என்பது இதன் பொருள். அர்ச்சாவதார சேவாரசி கரான திருமங்கையாழ்வாருடைய பாசுரத்தைப் பெறவேண்டும் என்ற இத்தலத்து எம்பெருமான் இந்த ஆழ்வார் திருக்கடல் மல்லை எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும்பொழுதும், திருக்கண்ணமங்கை எம்பெருமானுக்குச் சொல்மாலைகள் சாத்தும்போதும் அந்தர்யாமியாக ஆழ்வார் திருவுள்ளத்தில் சேவை சாதிக்கின்றார். ஆழ்வாரும் கிடைத்தற்கரிய முத்து கிடைத்ததே என்ற பெருமகிழ்ச்சியுடன், எக்களிப்புடன், “நின்றவூர் நித்திலத்தை’ என்றும், ‘'நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை’ என்றும் மங்களாசாசனம் செய்தருளுகின்றார். இரண்டாவது திருக்குறிப்பில் அந்த எம்பெருமான் சேவை சாதிக்கும் திருக்கோலத்தையே காட்டிவிடுகின்றார். ‘நின்ற நித்திலத்தொத்து’ என்ற தொடரில் எம்பெருமானின் நின்ற திருக்கோலம் காட்டப் பெறுவதைக்கண்டு பேரானந்தம் அடைகின்றோம். ஆழ்வாரின் திருவுள்ளத்தில் அந்தர்யாமியாகக் காட்சி அளித்தபோதும் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்திலேயே காட்சி அளித்த அற்புதத்தையும் சிந்திக் கின்றோம். ஆழ்வார் இந்தத் திவ்விய தேசத்திற்கு வந்து மங்களா சாசனம் செய்தது போன்ற பெருமையையும் பெற்றுவிடு கின்றார். ‘என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன்’, ‘தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்’, ‘ ‘என்னால் தன்னை வன்கவி பாடும் வைகுந்தநாதன்’ என்று நம்மாழ்வார்

5. சோழநாட்டு திவ்விய தேசங்களுள் ஒன்று. 6. பெரி. திரு . 2.5:2. 7. பெரி. திரு.; 10:5. நித்திலம் - முத்து; தொத்து - திரள். 8. திருவாய் - 7.9:1 9. மேலது - 7.9:2

10. மேலது - 7.9:6