பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

ஏற்ற நோற்றேற்(கு) இனி.என்ன

குறை எழுமையுமே.”

(வீவு இல்-முடிவுஇல்லாத சீர்-அனந்த கல்யாண குணங்கள்; வெம்மா-குதிரை வடிவாக வந்த கொடிய கேசி)

என்பது பாசுரம். சோறு உண்பதற்கு பசி கருவி ஆகுமாப்போலே எம்பெருமானே அநுபவிப்பதற்கு அளவு கடந்த ஆசையன்றோ கருவியாவது? இப்பாசுரத்தில் ஆழ்வார் அநுபவிக்கும் பேரானந்தம் சொற்களால் எல்லைக்கட்டிக் காட்டவொண்ணாது. ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்ற சொற்றொடர் ஆழ்வார் பெற்ற எக்களிப்பின் துடிப்பாகும். பரமபத நாதனை நேரில் கண்டாற்போன்ற ஆனந்தமாகும் இது. திருநின்றவூர் எம்பெருமானைச் சேவிக்கும் நமக்குள்ளும் இத்தகைய ஒர் அநுபவம் எழுவதை உணர்கின்றோம். அடுத்து, தாயார் சந்நிதிக்கு வருகின்றோம். என்னைப் பெற்ற தாயார் என்பது அவருடைய திருநாமம். அவரையும் சேவித்து அவருடைய திருவருளுக்குப் பாத்திரமாகின்றோம்.

பரிபூர்ணாநுபவம் பெற்றது போன்ற ஒருவித பெருமித உணர்வுடன் திருக்கோயில் பிரசாதங்களைப் பெற்று வெளியில் வருகின்றோம். பக்தி பரவசர்களாய் ஒர் அமைதியாக இடத்தில் அமர்கின்றோம். இந்நிலையில் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்களின் பாசுரம் நம் நினைவுக்கு வருகின்றது.

“சீர்அறிந்த தோழிமீர் சென்று கொணர்ந்(து) எனக்குப்

போர முலைமுகட்டில் பூட்டுமினோ-நேர் அவுனர்

பொன்றஊர் புட்கழுத்தில் பொன்னைமாணிக்கத்தை,

நின்றவூர் நித்திலத்தை நீர்”

(சீர்-சிறப்பு: முகடு-உச்சி, நேர் அவுணர்-எதிர்த்துப் பொருத அசுரர்கள்:

பொன்ற அழியும்படி புள்-பெரிய திருவடி)

என்ற பாடலை ஓதி உளங்கரைகின்றோம். மகள் பாசுரமாக வடிவு கொண்டுள்ள இது,

‘குற்றம் அற்ற முலைதன்னைக்

குமரன் கோலப் பணைத்தோளோடு

15. திருவாய். 4.5:1 16. நூற். திருப். அந் - 89