பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

உலகமெலாம் திரிந்து, அலுத்து, ஒய்வு பெறுவதற்காகத்தான் இந்தக் கடற்கரையில் வாய்திறவாமல் படுத்துக் கிடக்கின்றா யோ?” என்று விடுக்கும் வினாவில் ஆழ்வாரின் கடல்போன்ற பக்திப் பெருக்கு வெளிவருவதைக் கண்டு உள்ளம் குழைந்து மகிழ்கின்றோம். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் நாமும்,

“வேதத்தை வேதத்தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும், கோதுஇல் கனியை நந்தனார் களிற்றைக்

குவலயத் தோர்தொழு தேத்தும், ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவ ரில்லா மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே’

(கோது-குற்றம்; இங்கு எம்பெருமான் வேதம், வேதத்தின்பயன், முனிவர் கள் விழுங்கும் கனி, நந்தனார் களிறு என்று உருவகிக்கப்படுகின்றார்;

குவலயம் -பூமி, மாடம் - மாளிகை)

என்ற பெரிய திருமொழிப் பாசுரம் நம் மிடற்றொலியாக வெளிவர, இந்த எம்பெருமானைச் சேவிக்கின்றோம்.

உலகில் ஒவ்வொருவருடைய விருப்பம் ஒவ்வொரு விதமாக இருப்பதால் அவரவர்களுடைய விருப்பத்திற்கிணங்க எம்பெருமானை அடையும் வழிகளையும் அவற்றாலேற்படும் பயன்களையும் வேதத்தின் மூலமாகக் காட்டிக் கொடுக்கின்றமை பற்றி “வேதத்தின் சுவைப் பயனாக உருவகிக்கப் பெற்றுள்ளார் எம்பெருமான். வியாசர், பராசரர், வால்மீகி போன்ற முனிபுங்கவர்கட்கு இனிய கனிபோல் மிகவும் இனியனா யிருப்பது பற்றி விழுமிய முனிவரர் விழுங்கும் கோது.இல் இன்கனி’ எனப்போற்றப் பெறுகின்றார். எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் நந்தகோபருடைய திருமாளி கையில் யானைக்கன்றுபோல் விளையாடி அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தவனாதலால் ‘நந்தனார்களிறு என்று குறிப்பிடப் பெற்றுள்ளார். வேதல்லித் தாயார் ‘என் நாதன்’ என்று கூறிய கருத்தை உட்கொண்டே திருமங்கையாழ்வாரும் ‘என்னை ஆளுடைய அப்பனை’ என்று சுட்டுகின்றார் என்பதையும், வேதவல்லித் தாயார் திருவவதரித்து முக்கியத்துவம் பெற்ற

14. பெரி. திரு. . 2, 3 : 2.