பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கேணி அச்சுதன் 131

சொற்படி நடக்கிறேன்’ என வணங்குவித்துப் போரிலே ஆஸ்க்தனாக்குவதற்காக (ஈடுபாடுடையவனாக்குவது). ஆக இவையெல்லாம் செய்தது சரணாகதையான இவளுடைய சங்கற்பத்தின்படியே துரியோதனனை ஒழித்து இவள் கூந்தலை முடியச் செய்வதற்காகவாதலால் கண்ணன் மேற்கொண்ட செயல்கள் யாவும் இவள் பொருட்டே என்னத் தட்டில்லை. இந்த எண்ணங்களுடன்,

“அந்தகன் சிறுவன் அரசர்தம் அரசற்(கு)

இளைவன் அணியிழை யைச்சென்று, ‘எந்தமக்(கு) உரிமை செய்'எனத் தரியாது

‘எம்பெரு மான்!அருள் என்ன, சந்தம்அல் குழலாள் அலக்கண்நூற் றுவர்தம் பெண்டிரும், எய்தி,நூல் இழப்ப, இந்திரன் சிறுவன் தேர்முன்நின்றானைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே.”

(அந்தகன்-குருடன் (திருதராட்டிரன்); சிறுவன்-துரியோதனன்: இளைவயன் - துச்சாதன்ன; சந்தம் அல்-அழகிய இருண்ட குழல்-கூந்தல்; அலக்கண் - துன்பம்; நூல் மங்கள நாண் (தாலி); இந்திரன் சிறுவன்-அருச்சுனன்) என்ற பாசுரத்தை அநுசந்திக்கின்றோம். இந்நிலையில் சுரமலோகத்தின் பொருள் விளக்கமாக அமைந்த பாசுரங்களுள் ஒன்று நினைவுக்குவர, அதனையும் ஓதி உளங்கரைகின்றோம்.

“ஒண்தொடியாள் திருமகளும் தானும் ஆகி

ஒருநினைவால் என்றஉயிர் எல்லாம் உய்ய வண்துவரை நகர்வாழ வசுதே வற்குஆய்

மன்னவற்குத் தேர்ப்பாகன் ஆகி நின்ற தண்துளவ மலர்மார்பன் தானே சொன்ன

தனித்தருமம் தான்எமக்காய்த் தன்னை என்றும் கண்டுகளித்(து) அடிசூட விலக்காய் நின்ற

கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே’

(ஒண்தொடி-அழகிய வளையல்; நினைவு-சங்கல்பம்; வண்துவரை - அழகிய துவாரகை உயிர்-சீவான்மா ஆய்-(மகனாக) அவதரித்து:

தனித்தருமம்-நிகரற்ற உபாயம்; அடி-திருவடி விலக்கு-தடை கண் புதையல்-கண்ணம்பூச்சி)

என்பது அப்பாசுரம்.

21. பெரி. திரு. 2, 3 : 6. 22. தே. பி. - 85.