பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

‘வினைச் சுடரை நந்துவிக்கும்

வேங்கடமே வானோர் மனச்சுடரைத் துண்டுமலை’

(வினைச்சுடர்-தீவினையாகின்ற நெருப்பு: நந்துவிக்கும்-அணைக்கும்; மனச்சுடர் -இதயமாகிய விளக்கு)

என்று வேங்கடமலையைக் கண்ட பொய்கையாழ்வார் கூறும் அநுபவத்தைப் போன்ற ஒர் அநுபவத்தைப் பெறுவதை நாம் உணர்கின்றோம். இத்தலத்திற்குத் திருமங்கையாழ்வார் எழுந்தருளினபோது ஏரியின் நீர்ப்பிடிப்பால் அவரால் எம்பெரு மானைச் சென்று சேவிக்கமுடியவில்லை என்றும், பல நாட்கள் காத்திருந்து நீர் வடிந்த பிறகே சென்று சேவித்தார் என்றும் செவிவழிச் செய்தியால் அறிகின்றோம். இங்ஙனம் அரண்போல நீர் சூழ்ந்த இடத்தில் அமைந்திருப்பதால்தான் ‘நீர் மலை’ என்ற காரணப்பெயர் பெற்று ‘திரு” என்ற அடைமொழியுடன் ‘திருநீர்மலை’ என்று இம்மலை வழங்கி வருகின்றதுபோலும் என்ற ஊகத்தில் இறங்குகின்றோம். இதற்குள் குதிரைவண்டியும் குன்றின் அடிவாரத்தை வந்தடைகின்றது.

வண்டியை விட்டிறங்கியும் திருக்கோயிலின் சுற்றுப்புறச் சூழ்நிலை நம் கருத்தை ஈர்க்கின்றது. அதனைச் சுற்றிப் பார்க்கின்றோம். மலையும் திருக்கோயிலும் மிகப் பழைமை யானவை. மலையடிவாரத்திலுள்ள ஆலயமும் ஆழ்வார்கள் காலத்திலிருந்தே இருந்துவருகின்றது என்பதற்கு அகச்சான்றுகள் உள்ளன. அடிவாரத்திலுள்ள ஆலயத்திற்குப் பின்புறமாக ‘மணி கர்ணிகா புஷ்கரணி என்ற ஒரு திருக்குளம் நீராழி மண்டபத் துடன் எழிலுடன் திகழ்கின்றது. சிறிது துரத்தில் குளக்கரையில் வசந்த மண்டபம் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. மலையின் உயரம் சுமார் இருநூறு அடி இருக்கும். இந்தத் திவ்விய தேசத்தைப் பற்றிய பதிகத்தில்’ திருமங்கையாழ் வார் ஒவ்வொரு பாசுரத்திலும் இம்மலையினை ‘மா மலை’ என்றே குறிப்பிடு கின்றார். இஃது இறைவனைத் தாங்கி நிற்பதால் சிறந்த மலையா கின்றது என்ற கருத்தினால் இங்ஙனம் கூறப்பெற்றதாகக் கொள்ள லாம்; உயரம் பற்றியதனால் இல்லை. நீர்மலை எம்பெரு மானிடத்தில் தானான தன்மையிலும் பிராட்டியாகவுள்ள தன்மையிலும் தம்மையே இழந்த ஆழ்வார் அந்த எம்பெருமான்

21. முதல் திருவந் - 26. 22. பெரி. திரு. 2.4.