பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருக்கோவலுர்த் தீங்கரும்பு

வைணவ சமயத்தவர் தத்துவங்கள் மூன்று எனக் கொண்டனர். அவை சித்து, அசித்து, ஈசுவரன் என்பன. ஆழ்வார்களின் பாசுரங்களில் இத்தத்துவங்களைக் காணலாம். இவற்றுள் சித்தாகிய உயிரும், அசித்தாகிய பிரகிருதியும் இறைவனாகிய தலைவனுக்கு உடலாக அமைந்தள்ளன என்பது இந்த மூன்று தத்துவங்களும் இயைந்த நிலையை விளக்கும் கொள்கையாகும். சரீர-சரீரி பாவனை(உடல்-உயிர் உறவு) என்ற இந்தக் கொள்கையைச் சித்தாந்தப்படுத்தி முதன் முதலாக வெளியிட்டவர் இராமாநுசர். வேத வியாசர் அருளியுள்ள பிரம்ம சூத்திரங்களின் நாடி நரம்புகளையெல்லாம் நன்கறிந்த, ஆழ்வார்களின் பாசுரங்களின் தோய்ந்து நின்று இவ்வுண்மையை உலகிற்கு உணர்த்தினார் அந்த உத்தம சீலர். வடமொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் தெளிவு ஆகாதிருந்த பகுதிகள் யாவும் ஆழ்வார்களின் பாசுரங்களினால் தெளிந்தனவாகக் கூறுவர் வேதாந்த தேசிகர்.

‘செய்யதமிழ் மாலைகள்நாம்

தெளிய ஒதித் தெளியாத மறைநிலங்கள்

தெளிகின் றோமே.”

(தெளியாத மறை நிலங்கள்-விளங்கலாமலிருந்த வேதப் பகுதிகள்) என்பது அவரது திருவாக்கு. இந்த உடல்-உயிர் உறவுக் கொள்கைக்கு ஆழ்வார்களின் பாசுரங்களே வழி அமைத்தன வாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக,

“உடல்மிசை உயிர்எனக்

கரந்தெங்கும் பரந்துளன்’

நடுநாட்டுத்தலம். பேருந்துகளிலும் பிற இடங்களிலும் பிழையாக திருக் கோவிலுர்’ என்று எழுதப் பெற்றுள்ளது.

என்ற திருவாய்மொழிப் பாசுரப்பகுதியில் இக்கருத்து வந்துள்ளமை காணலாம்.