பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருவட்டபுயகரத்து எம்மான்

வைணவ தத்துவப்படி எம்பெருமானுக்கு உருவம் உண்டு. அது திவ்விய மங்கள விக்கிரகம் என்று வழங்கப்பெறும். இத்திருமேனியின் அவயவசோபையுடன் அவ்வவயவங்களில் அணியப்பெற்றுள்ள திவ்விய ஆபரணங்களும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்து அதன் அழகினைப் பன்மடங்கு உயர்த்துகின்றன. இந்தத் திருமேனியின் அழகு அடியார்களின் மனத்தைக் கவர்ந்து பிச்சேற்றி அவர்களைப் படுத்தும்பாடு சொல்லும் தரமன்று. ஆழ்வார்கள் ஞான நிலையிலிருந்து தாமான தன்மையிலும் பிரேம நிலையில் பெண்தன்மையை அடைந்து பெண் பேச்சாகப் பேசும் நிலையிலும் அருளியுள்ள பாசுரங்களி லிருந்து இதனை நன்கு அறியலாம்.

எம்பெருமானின் திருவடிகளில் அணியப்பெறும் நூபுரம் முதல் திருமுடியில் அணியப்பெறும் திருவபிடேகம் வரையிலும் உள்ள ஆபரணங்கள் எண்ணிறந்தவை. நாம் உலகில் கானும் ஆபரணங்களுக்குள்ள தோற்றம், அழிவு போன்ற குற்றங்களும், அவயவங்களுக்குப் பொருந்தாத தன்மையும் போன்று இத்திவ்வியாபரணங்கட்கு இல்லை. ஆயினும், உலகிலுள்ள மற்ற ஆபரணங்கட்கு இல்லாத மென்மை, அழகு, ஒளி முதலியன இவ்வாபரணங்களுக்கு உண்டு. தவிர, பரமபதத் திலுள்ள நித்திய சூரிகளே எம்பெருமானின் விருப்பத்திற்கேற்பப் பிரகிருதி சம்பந்தமே இல்லாத ஒவ்வோர் ஆபரண வடிவத்தை மேற்கொண்டு அவனுடைய திவ்விய அவயவங்களில் அமைந்து அவனை உவப்பிக்கின்றனர் என்பது வைணவர்களின் நம்பிக்கை. இந்த முறையைப்பற்றியே பகவானுடைய ஆபர னங்களுக்குத் ‘திவ்வியாபரன ஆழ்வார்கள்’ என்னும் திருநாமமும் வழங்கிவருகின்றது.

எம்பெருமானுடைய திவ்வியாயுதங்களும் எண்ணிறந் தவை. எம்பெருமானுக்கு எண்ணிறந்த கல்யாண குணங்களிருப்