பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

‘'அட்டபுயகரத்து எம்மான் ஏற்றை’ என்று குறிப்பிடுவர். அன்றியும், ஒரு தனிப்பதிகத்திலும் அட்டபுயகரத்து எம்மான் இந்த ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெறுகின்றார். இப்பதிகத்தில் ஆழ்வார் தாமான தன்மையைவிட்டுப் பிராட்டி மாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசி அநுபவிக்கின்றார். இப்பதிகம் ‘மகள் பாசுரங்களாகச்’ செல்லுகின்றது. நாமும் தலைவியின் நிலையை அடைந்து ஆழ்வார் பாசுரங்களை ஒதுகின்றோம்.


o


+& *

காதல் வெறி எத்தனையோ விதமாக உருவெடுக்கும். காரணமின்றி மகிழ்ச்சியும் எக்களிப்பும் உண்டாகும்; துயரமும் துன்பமும் தலைக்காட்டும்; ஆறுதலும் ஆதரவும் தோன்றும். இன்னும், என்னென்னமோ செய்யும். கள் வெறியைவிடக் காதல் வெறி உறைப்புடையது; ஆற்றலுடையது. காதல் வெறி இராவணனையும் சூர்ப்பணகையையும் படுத்தியபாட்டைக் கம்பராமாயணம் படித்தோர் நன்கு அறிவர். இருவரும் முறையே ஒரு துணைச் சீதையாகவும் இராமனாகவும் காணும் காட்சியை மிகவும் அற்புதமாக, நகைச்சுவை தோன்றும் பாணியில், சித்திரித்துள்ள கம்பனின் கவித்திறமையை எவரும் மறத்தல் முடியாது.” காதல் வெறியைப் போன்றதே பக்தி வெறியும். பக்தியுணர்ச்சி முற்றிய நிலையில் அதன் விளைவு தனிச்சிறப்புடையது. அந்நிலையில் உருவெளித்தோற்றமாக அது செயல் புரிவதை ஆழ்வார்கள் அற்புதமாகக் காட்டியுள்ளனர். உருவெளித்தோற்றம் (Hallucination) என்பது என்ன? ஒரு பொருளைப் பற்றி இடைவிடாது நினைக்கின்ற முதிர்ச்சியில், நினைக்கப்பெற்ற பொருளின் உருவம் போலியாகக் கண்ணுக்கெதிரில் தோன்றுவதே உருவெளித் தோற்றம் என்பது. இந்த உருவெளித்தோற்றம் உண்டாதல் அன்பினாலும் நிகழும்; அச்சத்தினாலும் உண்டாகும். சூர்ப்பனகையினால் சீதாப்பிராட்டியின் அழகை விரிவாகக் கேட்டறிந்த இராவணன் அச்சீதையை இடைவிடாது நினைத்த காரணத்தால் ஒரு பெண்ணுருவம் அவனுக்கு உருவெளித்

4. பெரி. திருமடல்-பகண்ணி.128 5. கம்பரா. ஆரணிய. மாரீசன்வதை-148, 149.