பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅட்டபுயகரத்து எம்மான் 37

என்று திருவரங்கப் பெருமானின் திருமேனி அழகில் ஆண்டாள் ஈடுபட்டதைப்போல் பரகாலநாயகியும் ஈடுபட்டதைக் காண்கின் றோம்.

மேலும் கூறுகின்றாள் பரகாலநாயகி: ‘'என்முன்னே தோன்றியருளின பெரியவர் தனியராய் வந்திலர், அவரைச் சுற்றிலும் நித்தியசூரிகள் சூழ்ந்து வணங்கிச் கொண்டிருந்தனர். அவர் வாயினின்றும் வேத ஒலிகள் வந்துகொண்டிருந்தன. அருகில் பெரிய பிராட்டியார் பட்ட மகிஷிபோல் திகழ்ந்தாள். இடக்கையில் திருச்சங்கும் வலக்கையில் திருவாழியும் பொலிந்தன. கருநெய்தல் பூவோ? அன்றி, கடல்தானோ? என்னும்படியான வடிவழகு தோன்றியது. அந்த வடிவழகுக்கும் கண்ணழகுக்கும் எல்லை காணமுடியாதபடி இருந்தது. என்னுடைய உயிர்தான் இங்ஙனம் உருவெடுத்துத் தோன்று கின்றதோ என்று எண்ணக்கூடியவாறு அவ்வடிவம் பேரன்புக்கு இலக்காக இருந்தது. இத்தகையவரை இன்னார் என்று அறுதியிட முடியாத நிலையில் இருந்த நான் இவர் ஆர் கொல்?’ என்றேன். அவரோ நான் தான் அட்டபுயகரத்தேன்’ என்றார்’ என்பதாக.

அவளுடைய பேச்சு மேலும் தொடர்கின்றது; அந்தத் தெய்வத் திருவுருவைக் கண்டதும், என் வளைகள் நழுவி விட்டன; என்னுடைய நெஞ்சமும் அவர் வயத்தாகிவிட்டது. இப்படி என்னுடைய அனைத்தையும் கவர்ந்து கொண்ட பிறகும் ‘இவ்விடத்தில் இன்னமும் ஏதாவது இருப்பின், அவற்றையும் கொள்வோம்’ என்ற திருவிருப்பால் என் இடை துவளும்படியாக உற்றுநோக்கித் தன் திருப்பவளத்தைத் திறந்து ஏதோ ஒன்று பணித்தார். இவர் நோக்கும் நோக்கில் நஞ்சு கலந்ததாகவே காணப்பட்டது. இவர் யார்?’ என்று கேட்கவும் அச்சமாக வுள்ளதே என்று சொல்லும் போதே ‘நான்தான் அட்டபுயகரத் தேன்’ என்றார்’ என்பதாக.

திருவட்டபுயகரத்து எம்பெருமான் முன்பு அவனுடைய வடிவழகில் ஈடுபட்டு நிற்கும் நாம் நாயகி பாவனையிலுள்ள பாசுரங்களை ஓதி உளங் கரைகின்றோம். ‘கலிகன்றி இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலையை ஏத்த

20. பெரி. திரு. 2.8:8 21. மேலது 2.8:9