பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

“ஸ்ரீ நந்தகோபரையும் கிருஷ்ணனையும் விடாத யசோதரைப் பிராட்டியைப் போலே.”

என்பது முமுட்சுப்படி வாக்கியம். யசோதைப் பிராட்டியார், மனைவியார் என்னும் தம் நிலைக்கேற்ப, கணவன் இன்புறுத்தற்கு நந்தகோபரையும், தாயார் என்னும் தம் நிலைக்கேற்ப புதல்வனைக் காத்தற்குக் கண்ணனையும் விடாமல் எங்ஙனம் தக்கமுறையில் பரிபாலித்து வந்தனரோ, அங்ஙனமே பிராட்டியாரும் ஈசுவரனையும் சேதநரையும் பற்றிக்கொண்டு செயலாற்றுவர் என்பதனை நாம் அறிதல் வேண்டும். சிவகோடிகளின் அன்னை அன்றோ எம்பிராட்டி?

இங்ஙனம் ஒருபக்கம் சேதநரையும், மற்றொருபக்கம் எம்பெருமானையும் திருத்துவதில் எந்த முறையை மேற் கொள்வார் பிராட்டி?

“இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே’

என்று கூறுகின்றது ரீவசனபூஷணம்.

முதலில் இறைவனை இவள் திருத்தும் முறையினைச் சிந்திக்கின்றோம். ‘பிரானே, சேதநனுடைய குற்றங்களைக் கணக்கிட்டு அவனை ஆட்கொள்ளாமல் நீர் இப்படித் தள்ளிக் கதவு அடைத்தால் இவனுக்கு வேறு பற்றுக்கோடு எங்குள்ளது? உங்கட்கும் இவனுக்கும் உண்டான உறவுமுறையைப் பார்த்தால் ‘உன்தன்னோடு, உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்று ஆண்டாள் கூறியபடியே குடநீர் வழித்தாலும் போகாதது ஒன்றல்லவா? உடைமையாக இருக்கின்ற இவனை அடைதல் ‘சுவாமியான’ உம்முடைய பேறாக அன்றோ இருக்கவேண்டும்? ‘எதிர் சூழல்புக்குத் திரிகின்ற உமக்கு நான் சொல்லவேண்டும் என்று உம்மிடம் விரும்பிவந்த இவனைக் காக்காவிடில் ‘எல்லாப் பொருள்களையும் காப்பவர்’ என்று மாலையிட்டுத்திரியும் உம்முடைய தன்மைக்கு இழுக்கு ஏற்படும் அல்லவா? அநாதிகாலமாக நம்முடைய ஆணையை மீறி

4. முமுட்சு - 43. 5. பூநீவச. பூஷ - 12 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 6. திருப் 28 7. சுவாமி சொம்மையுடையவன் சுவாமி; சொம் .

சொத்து.

8. திருவாய் 2.7:6