பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

홍 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

11. திருமால்பேறு

இத்தலத்து இறைவரைத் திருமால் பூசித்துப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் திருமால்பேறு என்னும் பெயரைப் பெற்றது. அரிசக்ரபுரம் என்றும், திருமால்பூர் என்றும் இதனைக் கூறுவா, இத்தலத் தைத் திருமால் வழிபட்டனர் என்பதைச் திருஞான சம்பந்தர் இத்தலத்தைப் பாடிய பாடலில் மன்னி மலொடு சோமன் பணிசெயும் ' என்று பாடியுள்ள அடியால் உணரலாம்.சோமன் என்பதற்குச் சந்திரன் என்பது பொருள். இதல்ை சந்திரனும் இத்தலத்துப் பெருமானப் போற்றியுள்ளான் என்பது தெரிகிறது. திருமால் இங்குள்ள இறைவரைப் பூசித்தமைக்குக் காரணம், திருமால் பகைவைேடு போர்புரியும் பொருட்டு, சிவபெருமானிடம் இருந்த சக்கரத்தைப் பெறவே என்க. இகனை பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம்புனல் வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும் கருமாற்கு இன்னருள் செய் துனார்' என்று அப்பர் பாடியுள்ள பாட்டால் அறிய லாம்.

திருமால் சக்கரத்தைப் பெற ஆயிரம், தாமரை மலர்கொண்டு பூசித்தார், அப்போது ஒரு மலர் குறையத் தரமரை மலர் போன்ற தமது கண்ணேப் பிடுங்கி அதனைத் திருவடியிலிட்டு வணங்கினர். இதனுல் இறைவர் இவருக்குப் பத்மாட்சன், என்னும் பெயரையும் சூட்டினர். பதுமாட்சன் என்பது தாமரைக் கண்ணன் என்று பொருள்படும்.

இத்தலத்தின் மூலட்டான இலிங்கத்தின் திரு முன் திருமால் கும்பிடும் கையினராய் எதிரில் நின்ற கோலத்தில் இருப்பதை இன்றும் காணலாம்.

பொரும் சண்டையிடும், ஆற்றின் - நெறியில், படை. சக்ராயுதம், புனல் - நீர், வினே பாவம்.