பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . . திருமால்பேறு 3 #

'இத்தலத்தை யார் கண்டு வணங்குகின்ருர் களோ, அவர்கள் பாவம் தீரவேண்டு மென்று திருமால் இறைவரை வேண்ட 'அவ்வாறே ஆகுக' என்று அருள் செய்த தலம். இங்கு நந்தியம் பெருமான் நின்ற வண்ணம் உளர். திருக்குளம் கீழ்க் கோபுரத்தருகே உளது. இத்தலத்து விருட்சம் வில்வம். இதனையும் கோவிலுக்குள் காணலாம். இத்தலம் செங்கல்பட்டு-அரக்கோணம் மார்க்கத்தில் அமைந்த திருமால்பூர் இரயில் அடியிலிருந்து மூன்று கல் தொலைவில் உளது.

இங்குள்ள இறைவர் திருப்பெயர் மால்வனங் கீசர் என்றும், மணிகண்டேஸ்வரர் என்றும் கூறப் பெறுவர். தேவியார் திருப்பெயர்கள் அஞ்சனுட்சி அம்மை, கருனேநாயகி என்பன. இங்குள்ள இறைவர் தீண்டாத் திருமேனியுடையார். அவருக்குக் குவளை மலர் சாத்தப்பெற்றுத் திருமுழுக்கு நடைபெறுகிறது. இங்குள்ள தீர்த்தம், அரிதீர்த்தம் பாலாறு என்பன.

கல் வெட்டுகளின் மூலம் இறைவர் திருமால் பேறுடையார், உத்தம சோழேஸ்வரமுடையார், அவிமுகத்தீஸ்வரர் என்னும் பெயர்களைப் பெற்றவர் என்பது தெரிகிறது. அக்னிஸ்வரர் கோயில் ஒன்று இருக்க வேண்டும் என்பதும் தெரிகிறது. கண்டரா தித்தர் ஐம்பெரு குழு அமைத்து நிலங்களைக் கவனித்துக் கொள்ளவும் படையலுக்கு நெல் கொடுக்கவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விராட அரசன் அனேயமான் மண்டலாதித்தன் திருமால் பேறுடையார் கோயிலைக் கட்டவும், சுற்று: மண்டபம் முற்றுப் பெறவும் தானம் செய்துள்ளான். உத்தம சோழேசுவரம் உடையார் உருவம் செய்யச் சேதிராயன் நிலத்தைத் தானம் கொடுத்திருக்கிருன்.