பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

இத் தலத்தை மாதர் பலர் வந்து வணங்கிச் செல்வர். இதனை மை, அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச என்னும் வரியில் காணலாம்.

சம்பந்தர் தமது சீர்காழியைக் குறிப்பிடும்போது காந்தள் மலர் மலரும் காட்டினையுடையது என்றும், கொடிகள் பறக்கும் மாடங்களையுடையது என்றும் பாடுகின்ருர். இப்பதிகப் பாடலைப் படிக்க வல்லவர் கள் பரல்ோகத்தில் இருப்பர் என்றும் கூறுகின்ருர். இவ்வுண்மைகளே கோடல் இரும்புறவின் கொடி மாடம்' என்றும், பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத் திருப்பாரே " என்றும் வருதல் கொண்டு உணர்க. 'நெய் அணி மூவிலைவேல் நிறைவெண் மழுவும்

அனலும் அன்று கை அணி கொள்கையினுன் கடவுள் இடம்வின வில் மை அணி கண்மடவார் பலர் வந் திறைஞ்ச மன்னிநம்மை உய்யும் வகைபுரிந்தான் திருவூறல் உள்குதுமே ’

-முதல் திருமுறை:

13. திருஇலம்பையங்கோட்டுர்

இத் தலம் அரம்பை முதலான தேவலோக மாதர்களால் பூசிக்கப்பட்டது. ஆகவே அரம்பையங் கோட்டுச் என்று இருக்க வேண்டியது இலம்பையங், கோட்டுச் என மருவியது. சந்திரன், தேவகன்னியர் களும் பூசித்த தலம். சுவாமிக்கு ஒரு கால பூசையே நடக்கிறது. இவ்வூரில் கிறித்தவர்கள் மிகுதி. நாம் இறைவரை வணங்க வேண்டுமானுல் கூவத். திலிருந்து பூசை செய்யப் போகும் குருக்களுடன் சென்று உடனே அவருடன் திரும்புவது நல்லது.

மூவிலை வேல் - சூலம், இறைஞ்ச வணங்க, மன்னி - வீற்றிருந்து, உய்யும் ஈடேறும்,