பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருஇலம்பையங்கோட்டுச் 1 or

இத் தலத்தைக் கடம்பத்துனர் இரயில் அடியி லிருந்து எட்டுக்கல் சென்று கூவத்தை அடைந்து, அவ்வூர் ஏரியில் தண்ணிர் இல்லாதபோது ஏரிக்குள்

ஒரு கல் நடந்தால் அடையலாம். இன்றேல்

ஏரிகரை வழியே சுற்றிச்செல்ல வேண்டும். தக்கோ லத்திலிருந்து மேற்கே இரண்டு கல் கடந்தாலும் இத்தலத்தை அடையலாம்.

இங்குள்ள இறைவர் சந்திரசேகரர், தேவ. நாயகர் என்றும், தேவியார் கோலேந்து முலை. அம்மை என்றும் கூறப்பெறுவர். இங்குள்ள தீர்த்தம் சந்திர தீர்த்தம். கல்வெட்டின் மூலம் இத். தலத்து இறைவர் இலம்பையங் கோட்டுர் உடைய நாயனுர் என அறிகிருேம். மேலும் விளக்கிற்கு. நெல், பொன், ஆடுகள், நிலங்கள் முதலியன கொடுக்கப்பட்ட செய்திகளும் தெரிய வருகின்றன.

இத் தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. இந்பதிகத்தை எண்சீர் விருத்தத்தால் அமைந்த எண்சீர் விருத்தம் என் னலாம். ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைக் கொண்டு வந்திருப்பதைக் காண்க. இப் பதிகப் பண் குறிஞ்சி. இதனை அரிகாம்போதி இராகம் என்று கூறுவர். இப்பதிகம் அகப் பொருள் துறை. அமைந்த பதிகம் ஆகும். அதாவது திருஞான சம்பந்தர் தம்மை இறைவர் மீது காமம் உற்ற, தலைவியாக நினைந்து பாடிய பாவனையில் அமைந்: துள்ளது என்பதாம். இதில் அமைந்த அகப்பொருள் துறை, காமம் மிக்க கழிபடர் கிளேவி எனப்படும். இதன் பொருள், தலைவி காமம் மிக்கமையின் பெருந்: துயர் உற்றுக் கூறிய மொழிகள் என்பதாம்.

இதன் பேரின்பப் பொருள், சிவத்தோடு இடைவிடாமல் இருத்தலாகிய இணைந்த பாவனை