பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

சிறப்புகளையும் அவ்வத் தலங்களே அடையும் வழி வகைகளைப் பற்றியும் தனித்தனியே ஆய்வோமாக.

1. திருக்கச்சி ஏகம்பம்

ஏகம்பம் என்பது கோயிலின் பெயர். இக் கோயில் காஞ்சியம் பதியில் உள்ளது. (அதாவது காஞ்சிபுரம் ரயில் அடியிலிருந்து ஒரு கல் தொலைவில் உளது) ஆகவே, இது கச்சி ஏகம்பம் எனப்பட்டது. திரு அடைமொழியாகும். கம்பம் என்பது நடுக்கம் என்னும் பொருளேத் தரும். இறைவியார் கயிலையில் இறைவரோடு வீற்றிருந்த போது, விளையாட்டாக இறைவரின் கண்களை மூடினர். எனவே உலகமே இருண்டது. இந்நிலையில் உலகுயிர்கள் படாதபாடு பட்டன. அதனால் இறைவியார்க்குப் பழிச்சொல் வந்துற்றது. அந்தப் பழிச்சொல்தீர, இறைவர் காஞ்சியம்பதிக்குச் சென்று தம்மைப் பூசிக்குமாறு கட்டளே பிறப்பித்தனர். அக்கட்டளைப்படி இறைவியார் காஞ்சியம்பதிக்கு எழுந்தருளி, இறைவரிடம் இருநாழி நெல் பெற்று முப்பத்திரண்டு அறங்களைச் செய்து கொண்டும், தவத்தை மேற்கொண்டும் இறைவரைப் பூசிக்கும் போது, அம்மையாரது உண்மை அன்பை அறிய இறைவர், தமது கங்கை ஆற்றைக் கம்பா நதியாக வருமாறும் தம்மை அடித்து கொண்டோடுமாறும் பணிக்க, அவ்வாறே கங்கை, ஆறாக வருவதைக் கண்டு உமையாள் (காமாட்சி அம்மையார்) கம்பித்து(நடுங்கி) இறைவரைத் தமது வளையல் தழும்பும், முலைத் தழும்பும் பதியுமாறு தழுவிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது இறைவியார் கம்பித்ததனால் இத்தலம் கம்பம் எனப்பட்டது.

இத்தலத்தின் இறைவர் ஏகாம்பரர் என்னும் பெயர் உடையவர். இதற்குக் காரணம் ஒற்றை மாமரத் தடியில் இங்குள்ள இறைவர் வீற்றிருப்-