பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

நீலி என்னும் பெயருடன் ஒரு சத்திரத்தில் ஒரு குழந்தையுடன் தங்கி இருந்தனள், ஒரு நாள் தன்னக் கொன்ற கணவன் அவ்வழியே வந்தனன். அதுபோது அவனே வழி மடக்கி என்ன இம்மாலே யில் தனியே விட்டுப் போவது சரியன்று' என்று கூறித் தடுத்தாள். அவன் அவளைப் பேய் என்று உணர்ந்து அவளேத் தள்ளிவிட்டு மேலே நடந்தான். அந்தச் சமயம் பழையனூர் வேளாளர்கள் அவ் வழியே வந்தனர். அவர்கள் இருவர்களின் உரையா டல்களையும் கேட்டு நீலியின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்துச் செட்டி ம்கன நோக்கி, "நீ இவளோடு இங்குத் தங்குக. இவளால் உன் உயிர்க்கு ஆபத்து நேர்ந்தால், நாங்கள் எழுபது பேரும் எங்கள் உயி ரைக் கொடுப்போம் என்றனர். அவர்கள் பேச்சைக் கேட்டு வணிகன் அன்று இரவு அவளுடன் தங்கி ன்ை. அப்பேய் அவனே அறைந்து கொன்று மறைந் தது. வேளாளர்கள் காலையில் வந்து பார்த்தனர். வணிகன் இறந்து கிடப்பதைக் கண்டனர். ஆகவே சொன்ன சொல்லைத் தட்டாது தீக்குழி அமைத்துத் தீ எழுப்பி அதில் இறங்கி இறந்தனர். இதனை

சம்பந்தர் தம் திருப்பதிகத்தில்,

'வஞ்சப்படுத் தோருத்தி வாளுள் கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனுர் ஆலங்காட்டெம் அடிகளே' என்று பாடிக் குறிப்பிட்டுள்ளனர்.

திருவாலங்காட்டுத் தலத்திற்குக் காரைக்கால் அம்மையார் பாடியுள்ள பதிகங்கள் இரண்டும், திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பாடிய திருநேரிசை, திருத்தாண். டகம் ஆகிய இரு பதிகங்களும், சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றும் ஆக ஆறு உண்டு. - -

ஒருத்தி நீலி. வாளுள் வாழ்நாள்.