பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருவாலங்காடு 盖罗莎

காரைக்காலம்மையாரின் இரண்டாவது மூத்த திருப்பதிகம் அறுசீர்க் கழிநெடில்அடி ஆசிரிய விருத்தம். ஒவ்வொரு பாட்டின் அடிகளும் ஆறு சிர்களைக் கொண்டு திகழ்வதை உற்று நோக்கவும். இதில் சந்தம் அமைந்திருப்பதைக் காண்க. பாட். டைப் படிக்கும்போது சந்தம் துள்ளுவதை உணர லாம். இப்பதிகப் பண் இந்தளம். இதனே இக்கால இசைகளில் இலளித பஞ்சமியிலும், நாதநாமக்கிரி யையிலும் ஒருவாறு அடக்கலாம். இப் பதிகத். திலும் சுடலையின் வர்ணனையே பேசப்பட்டுள்ளது. இந்தச் சுடலையில் இறைவர் ஆடுதல் புகழப் ப்ட்டுள்ளது. இறைவர் பேய்கள் முழவம் (மத்தளம்) வாசிக்கக் கூளி, (இதுவும் ஒருவகைப் பேய்) பாட ஆடுகின்ருர் என்றும், அனலைக் கையில் ஏந்தி, ஆடுகின்ருர் என்றும், பித்த வேடங் கொண்டு ஆடுகின்ருர் என்றும், கூளிக் கூட்டம், புல்லாங் குழில் வாசிக்க, தேவர்கள் மத்தள ஓசை இசைக்க ஆடுகின்ருன் என்றும், மாலே அந்திப்பொழுதில் ஆடுகின்ருன் என்றும், மலேமகளாம் உமையார் கண்டு மருளும்படி ஆடுகின்ருன் என்றும், இசை பாட உடுக்கையும் பறையும் ஒலிக்க ஆடுகின்ருன் என்றும், சடைகள் தாழ ஆடுகின்ருன் என்றும் பாடப்பட்டுள்ளதைக் காண்க. -

இறைவர் குழகன், (இளையன்) அழகன், பெரு மான், பரமன், மாயன், விமலன், அடிகள் என்று குறிக்கப்பட்டுள்ளனர்.

சுடலைக்காட்டில் எட்டி, இலவம், ஈகை, சூரை, காரை, கள்ளி ஆகிய மரங்கள் பரந்துள்ளன என்றும், பினங்கள் பரவி இருந்தன என்றும் வர்ணிக்கப் பட்டிருப்பதை அறியவும்.

பறைபோன்ற கண்களையுடைய பேய்கள் பிணக். குடர்களே எடுத்துச் செல்லும். சுட்ட பிணங்களின்