பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

தசை தீயில் உருக்கி நிலம் எல்லாம் நனையும். பேய்கள் துணங்கை என்னும் கூத்தை ஆடும், இனங்களைத் தின்று மகிழ்ந்து இருக்கும். இவற்றை எல்லாம் நோக்கப் பார்ப்பவர்களுக்கு அச்சத்தை விளேவிக்கும். பறவைகள் செத்து பிணங்களின் தலையைத் துளைக்கும். அத் தலைகளே நரிகள் கவர்ந்து செல்லும், ஆந்தைகள் அந் நரிகளைத் தம் சிறகால் அடிக்கும். ஊமத் கோட்டான் பிறர் அஞ்ச விழித்துப் பார்க்கும். நரிகள் எங்கும் நடந்து பிணங்களைத் தம் விரலால் பிளக்கும். ஒரு பேய் செத்த பிணத்தைப் பிணம் என்று அறியாமல், சுட்டிக் காட்டிக் கத்தி உறுமி, அதன்மீது நெருப்பை வீசி, அப் பிணத்தைத் தாண்டிக் கடந்து போய், வயிற்றில் அடித்துக் கொள்ள அவ்வோசை கேட்டுப் பல பேய்கள் விலகி ஓடும். முள்ளிச் செடிகள் தீந்து இருக்கும். முளரிச் செடி (முள் செடி) கருகி இருக்கும், மூளைகள் சிதறிக் கிடக்கும், கள்ளிச் செடிகள் வற்றி இருக்கும். எங்கும் வெள்ளிடமாக இருக்கும். வளைந்த வாள் போன்ற பற்களேயுடைய கூகைப் பறவை மூளையையும், பிணத்தையையும், விழுங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். ஒரு பேய் தனக்கு உண்ணும் பொருள் ஒன்றும் கிடைக்காமை யால் சிந்தனையில் ஆழ்ந்து உறங்கும், மூங்கில்கள் நன்கு வளர்ந்து முத்துகளேச் சிந்தும். மெலிந்த உருவும், உலர்ந்த கூந்தலும், பருத்த அலறும் வாயும் உடைய பேய்கள் கூடிப் பிணங்களே உண்ணும். அருகில் உள்ள சோலைகளில் ஆண் குரங்குகள் துள்ளிக் கொண்டிருக்கும். மூங்கில்கள் வளர்ந்து கொண்டிருக்கும். கழுகும், பேயும், பிணங் களின் தலையும், புகையும் நிறைந்திருக்கும். குண் டான வயிறுடைய குறியதும், சிறியதும், நெடியது மான பேய்கள் நிறைந்திருக்கும். இண்டைக் கொடிகள் மிக்கிருக்கும், இருள் சூழ்ந்திருக்கும்.