பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருவாலங்காடு !2割

ஒரு பேய் தன் குழந்தையைப் பயமுருத்தித் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கும். இவ்வாறெல்லாம் இந்தச்சுடலே இப்பதிகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார் தம்மை "கனல் வாய் எயிற்று (பல்)க் காரைக்கால் பேய்' என்று கூறிக் கொள்கின்றனர். மேலும் இப் பதிகத்தின் வழி அம்மையார் பெயர் காரைக்காலம்மையார் என்பதும் தெரிய வருகிறது. இவ் அகச் சான்ருல், அம்மையார் பேய் வடிவு கொண்டதை உறுதிப் படுத்தலாம். இந்தப் பதிகப் பாடலைப் பாடி ஆடினுல் பாவம் போகும் என்னும் பயனும் கூறப் பட்டுள்ளது. செத்த பிணத்தைத் தெளியா தொரு பேய் சென்று

- (விரல்சுட்டிக் கத்தி யுறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப் பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப் வித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே” :நொந்திக் கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச் சிந்தித் திருந்தங் குறங்கும் சிறுபேய் சிரமப் படுகாட்டின் முந்தி அமரர் முழவின் ஒசை முறைமை வழுவாமே அந்தி நிருத்தம் அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே” 'குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கல் பேய் இண்டு படர்ந்த இருள் சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய் கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள் என் றிசையாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே'

-காரைக்கால் அம்மையார் இரண்டாவது மூத்த திருப்பதிகம்

இரிந்து - சிதறி. நட்டம் - நடனம். தொந்தி - அழிந்து. கடலே - சுடுகாடு, நுகரும் - உண்ணும். புழுக்கு - சோறு, அமரர் - தேவர். முழவு மத்தளம். வழுவ: மே த ைருமல். அந் தி - மலே நிருத்தம் - தடணம், குண்டை - குறு கித் தடித் தது. பிறங்கு - விளங் ஆம், இண்டு . இண்டங்கொடி. குழவி - குழந்தை. எரி வாய் - கொள்ளிவாய் எயிறு - பல், வெருட்டி - பயமுறுத்தி. மீண்டி - தெருங்கி. விமலன் . சிவபெருமான்,