பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தொண்டைநாட்டு பாடல்பெற்ற சிவதலங்கள்

ஏழுள் முக்கியமாம் காஞ்சி' என்று கூறப்பட்டு வருதலையும் காண்க. வடமொழியிலும் இந்நகரின் சிறப்பை 'நகரேக்ஷு காஞ்சி' என்று கூறப்படுகிறது.


காஞ்சிபுரம் பஞ்சபூத தலங்களுள் பிருதிவி தலமாகும். பிருதிவி என்பது மண். இன்றும் ஏகாம்பர நாதர், கருவறையில் (மூலட்டானத்தில்) புற்று வடிவாக இருக்கின்றார். இத்தலம் மிகப் பெரியது. இங்குள்ள மூலட்டானப் பெருமானத் திங்கட்கிழமை தோறும் கண்டு களிப்பது மிக்க சிறப்புடையதாகும். அதுபோது மூலட்டானப் பெருமான், இறைவியார் தம்மைத் தழுவும் கோலத்தில் காட்சி அளிப்பர்.

ஏகாம்பரநாதரைப் பாலூர் வாசிகள் சித்திரை மாதம் தேய்பிறை பஞ்சமி திதி அன்று வரவழைப்புதுண்டு. இவ்வாறு ஏகாம்பரநாதரும் காமாட்சி அம்மையாரும் தடைஇன்றிப் பாலூருக்கு வருவதற்கு நிரந்தரமாக பணி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏகாம்பரநாதர் காஞ்சியினின்றும் இரவு புறப்பட்டுப் பாலூர் கிராமத்தைச் சுற்றி வந்தபின், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் எழுந்தருவர். அங்கு திருமுழுக்கு, ஒப்பனை, ஒளி வழிபாடு( அபிடேக அலங்கார ஆராதனைகள்) முடிந்த நாதசுர இசை அரங்கம் நடந்த எட்டு ஒன்பது மணிக்கு மண்டபத்தை ஆற்று மணல் வெளிக்கு ஏகாம்பர ஆற்றில் சதுரமாக வெட்டி நீர் வைத்திருப்பர். அந்நீரில் இறைவர் சுற்று வந்து இடையில் உள்ள தங்கி விடியற்காலம் காஞ்சிபுரத் திரும்புவர். இவ்விழா பாலூர் திருவூறல் எனப்படும். விழா சிறப்பாக நடைபெறும். மக்கள் பெருவாரியாகத் திரளும்.

இத்