பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருவாலங்காடு 13ぎ

சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ள பதிகம் அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம். ஒவ்வோர் பாட்டின் ஒவ்வோர் அடியிலும் ஆறு ஆறு சீர்கள் இருப்பதைக் காண்க. இப்பதிகப் பண்பழம்பஞ்சுரம். இதனை இக்காலச் சங்கராபரண இசை என ஒரு வாறு கூறலாம். இப்பதிகத்தின் மூலம் நாம் அறிவன: சுந்தரர் தம் கண்பார்வையை இழந்து திருவாரூர் நோக்கிப் புறப்பட்டு வரும் வழியில், திருவாலங் காட்டை அடைந்து பாடும்போது, தாம் அடியார்க்கு அடியனுக இருந்தும், கண் ஒளி மங்கச் செய்தனரே இறைவர் என்னும் வருத்தத்தால் இத்தலப் பதிகத் தின் ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும் 'ஆலங்காடா, உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே?’ என்று உருக்கமாகப் பாடியுள்ளனர்.

சுந்தரர், இறைவரை "முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமை பங்கா, சித்தா, சித்தி திறம் காட்டும் காட்ட சிவனே, பத்தர் பலர் போற் றும் பரமா. அத்தா, என ஆண்ட மெய்யா, மெய்யர் மெய்ப்பொருளே, தூண்டர் விளக்கின் நற்சோதி, தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய், பண்டாழ் வினே கள் அவை தீர்க்கும் பரமா, கண்ணுய் உலகம் காக் கின்ற கருத்தா, தழலாய் நின்ற தத்துவன், பாழாம் வினேகள் அளவை தீர்க்கும் பரமா, ஏழ், ஏழ்படி கால் எமை ஆண்ட பெம்மான் என்று புகழ்ந்துள்ளார்.

சுந்தரர் தம் நிலையைப் பற்றிக் கூறும்போது

பொய் பேசி, வீணே திரிந்தவன் என்றும், அப்படித் திரிந்த தன்னே இறைவர் வந்து ஆட்கொள்ளப்

முத்தா - மோட்சத்திற்குக் காரணனே. அத்த - தந்தையே, தத்துவன் - உண்மைப் பொருளாய் உள்ளவன். படிகால் - தலைமுறை பெம் கான் - பெருமையில் சிறந்தவன் . பாண்டு - முன்பு.