பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

'முத்தா முத்தி இரவல்ல முகிழ்மென் மூலேயாள் உமைபங்கா சித்த சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனு மேய ஆத்த ஆலங் காடாஉன் னடியா: க் கடியேன் ஆவேனே." வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா விண் டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியாளே. பண்டாழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழைய னுார்மேய அண்டா ஆலங் கனடா உன் அடிய க் கடியேன் ஆவேனே. -ஏழா ந் திருமுற்ை.

இத் தலத்து முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் நான்கு அவற்றுள் ஒன்று. கழவருவன :

புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி

புது மன மானும் பூட்டி இடையூடே பொறிபுலன் ஈர்ஐந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி -

புகல் வழி நா8லந் தாக்கி வருகாயம்

முத்தி - மோட்சம். அத்தா தந்தையே, சித்தி . அறிவு. தேவர் சிங்கம் என்பது இறைவர் பெயர். ஆர் - பொருந்திய, குழலி - கூந்தலையுடைய பார்வதி (வண்டார் குழலி, இத்தலத்துத் தேவியாரின் பெயர்) விண்டார் . பகைவர். புரங்கள் . மூன்று கோட்டைகள். எரிசெய்த - தீக்கு இரை ஆக்கிய விடையாய் - இரடபத்தை உடையவனே. பண்டு ஆழ் - முன் பிறவியில் அழுந்திய அண்டா - தேவனே. -

புவி - பூமி, மண் பு ைல் - நீர். கால் - காற்று. சிகி. நெருப்பு. பொறி - ஐம்பொறி, உடல், வாய், கண், மூக்கு, செவி, புலன் - ஐம்புலன். தொட்டுணர்ச்சி, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. ஈரைந்து . பத்துக் கருவிகள் . காயம் . சரீரம்.