பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருப்பாசூர் 割4製

இத் தலத்து இறைவர் பாசூர் நாதேஸ்வரர், பாசுப்தேஸ்வரர், வாகீஸ்வரர் என்றும், தேவியார் பசுபதி நாயகி அம்மை, சுயம்புவல்லி என்றும் குறிப்பிடப் படுவர். தீர்த்தம் சோழ தீர்த்தம். இங்கு. வைகாசியில் பெருவிழா நடைபெறும். இத் தலத்தை உச்சிக் காலப் பூசையில் தரிசித்தல் விசேடம். கார ணம், ஏனைய தலங்களின் கலைகள் இங்கு அதுபோது வந்து கூடுகின்றன என்பது. இக்குறிப்பு பாகப் பொழுதெலாம் பாசூர் தங்கி” எனும் அப்பர் வாக்கால் தெரிய வருகிறது.

இத் தலத்துக் கல் வெட்டால் அறிய வருவன : இராச ராசன் பூசைக்காக நாற்பத்தேழு பொன் காசு தந்துள்ளனன். விளக்கிற்காக முப்பத்திரண்டு. பசுவும், முரச வாத்தியத்திற்காக ஓர் எருதும் கொடுக்கப் பட்டன. குலோத்துங்கன் காலத்தில் ஒரு மாது திரு ஆபரணத்திற்காக முப்பது பொன் காசும், நாள் ஒன்றுக்கு இரண்டு படி அரிசியும். தந்துள்ளனள். காலிங்கராயன் என்பான் பத்து விளக்குகளின் பொருட்டு எழுபத் தெட்டுப் பொன் காசுகள் கொடுத்துள்ளான். ஒருவன் ஒரு தோட்டத் தையும் கோவிலுக்கு அளித்துள்ளான். இத் தலத் தைத் திருவள்ளுர் இரயில், (திருஎவ்வளுர் என்பதே சரியான சொல்) அடியிலிருந்து வடக்கே இரண்டு கல் சென்று அங்கிருந்து மேற்கே இரண்டு கல் கடந்தால் அடையலாம். இதுபோது இங்குச் செல்லப். பஸ் போக்கு வரவு உண்டு. .

இத் தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய, பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பாடிய இரு, பதிகங்களும் (ஒன்று குறுந்தொகை, மற்ருென்று. திருத்தாண்டகம்) ஆக மூன்று பதிகங்கள் உண்டு.

திருஞானசம்பந்தர் பதிகம் கலிநிலைத் துறை யாகும். அதாவது ஒர் அடிக்கு ஐந்து சீர்களைக் கொண்டு அமையும் பாடல் என்க. இதனைப் பதிகம்