பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

என்று கடிமலர்கள் அவை தூவி ஏத்த நின்ற பாகு: மேய பரஞ்சுடர் ' என்ற அடியாலும் வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தான். வர்கள் வணங்கி ஏந்தும்' என்று அறிவித்துள்ளனர். தானவர்களையும் சேர்த்துக் கூறி இருப்பதால் அரக்கர்களும் இத்தலத்து இறைவரைப் போற்றி. வழிப்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது. இறைவர்ே. எல்லாப் பொருள்கட்கும் வித்தாவர், மழை ஆவர். என்னும் கருத்துகள் " விரிகின்ற பொருட்கெல்லாம் வித்தும் ஆகிக் கொண்டல் ஆகி" என்னும் வரியால் தெரிய வருகிறது. இறைவர் ஒப்பற்றவர் ஆதலே "இனே ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார்: என்னும் வரி உணர்த்துகிறது. இறைவர் இசைக்கு இரக்கம் காட்டுபவர் என்பதை " இசை கேட்டு இரக்கம் கொண்ட பாந்தள் அணி சடைமுடி எம்பாசூர் மேய பரஞ்சுடர்' என்னும் வரியால் அறிய வருகிறது.

இப் பதிகத்தில் காஞ்சி, திருஒற்றியூர், திரு இடை மருதூர் ஆகிய தலங்கள் குறிக்கப்பட்டுள் ளன. திருவாலங்காட்டையும் நமக்கு நினைவு படுத்துவார் போல ஆடினும் பெருங் கூத்துக் காளி காண ' என்னும் வரிகொண்டு உணர்த்தி யுள்ளனர்.

ஒன்பதாவது பாடலில் இறைவர், சிலந்தி தமக்கு தன் வாயின் நூலால் பந்தர் இட்டு வெயில் படாதிருக் கச் செய்த காரணத்தால் அதனே அடுத்த பிறப்பில் கோச் செங்கட் சோழனுகப் பிறக்கச் செய்து சோழ நாட்டை ஆளச் செய்த கருணையையும், வெள்ளே யானே பூசித்து மோட்சம் பெற்றதையும் குறிப்பிட்டுப் பாடி யுள்ளனர். இவை இரண்டும் தொண்டுசெய்த தலம் திருவானைக்கா ஆகும். -

கடி.வாசனே. ஏத்த-போற்ற. மது-தேன். தானவர்கள். ஆரக்கர்கள். கொண்டல் மழை.