பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 0 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

மோன் திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்கள் எல்லாம்

தோன்ற அருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்.

ஈன்றவனே வெண்கோயில் இருந்தா யோஎன்ன

ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்ருனே' என்று பாடுதல் காண்க.

இதன் பொருள் 'மான்போலும் கண்களையுடைய சங்கிலி நாய்ச்சியாரை மணம் முடித்து அவளால் நான் பெறக் கூடிய பயன்களே எல்லாம் பெற அருள் செய்தீர். இதை உலகம் எல்லாம் சொல்லுமே. அப்படி அருள் செய்த நீங்கள், நான் கண் இழந்த வருத்தத்தால் கோயிலில் உள்ளிரோ என்று கேட்டபோது,நீங்கள் எனக்கு ஊன்றுகோல் அளித்து ‘உள்ளோம் போமின்' என்று கூறுகின்றீரே. இது முறையோ ?' என்பது. இறைவர் உளோம் போகீர் என்று கூறிவிட்டுத் தாமும் இறைவியுமாக வயலில் களே பிடுங்கச் சென்று விட்டனர் என்று ஒரு செவி மரபு செய்தி கூறப்படுகிறது.

இத் தலத்தைப் பற்றிச் சுந்தரர் பாடிய பதிகம்

ஒன்றே உளது. இப் பதிகம் தரவு கொச்சகப் பாட் டாகும். காரணம் ஒவ்வோர் அடியும் மூவசைச் சீர்கள் நான்கைப் பெற்றிருப்பதல்ை என்க. இப் பதிகப் பண் சிகாமரம் ஆகும். இதனை இக்காலத்து நாதநாமக் கிரியை இசையில் அடக்கலாம். இப்பதி கத்தில் சுந்தரருடைய வரலாற்றுக் குறிப்புகள் மிகுதி யும் அடங்கி உள்ளன. முன்பு சுந்தரர்க்கு இறைவர் ஊன்று கோல் தந்ததைப் பார்த்தோம். முதல் பாட் டில் சுந்தரர் தாம் சத்தியம் பிழைத்த காரணத்தால் தான், தம் கண் பார்வையை இறைவர் கெடுத்தார் எனபதை,

மான் திகழும் . மான் போலும் கண்களைக் கொண்டு: விளங்கும், சங்கிலி - சங்கிலி நாச்சியார். ஈன்றவனே . படைத்தவனே.