பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. திருவெண்பாக்கம் 1 5 ;

  • பிழை உளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழி அதனைப் பாராதே படலம்என் கண் மறைப்பித்தாய் '

என்று குறிப்பிடுகின்றனர்.

சுந்தரர், இறைவர் தம் தோழர் என்ற உரிமை யில்ை பிழையையும் பொறுப்பர் என்ற உறுதியில்ை சொன்ன சொல்லேத் தவறுதலாகிய குற்றம் செய் ததை நயமுடன் கூறி இருப்பதைக் காண்க. நயத் துக்குச் சுந்தரனுர் அல்லரோ? தம் கண் பார்வையை மறைத்ததை ஆருவது பாடலில் கண் மணியை மறைப் பித்தாய் ' என்று கூறிக் கதறுகின்ருர்.

இறைவர், சுந்தரரின் வரலாற்று நிகழ்ச்சியில் மற்றும் ஒரு திருவிளையாடல் புரிந்ததையும் ஒன்ப தாவது செய்யுளில் குறிப்பிடுகின்ருர்,

சுந்தரர் இறைவரைச் சங்கிலியாரை மணம் முடிக்க வேண்டினர். இறைவர் இவ் வேண்டு கோட்கு இணங்கிச் சங்கிலியாரை அடைந்து சுந்தரர் கருத்தைத் தெரிவித்தனர். அவ்வம்மையாரும் இசைந்து, திருஒற்றியூர் எல்லேயை விட்டு அவர் போவதில்லை என்று கோவிலில் சத்தியம் செய்து கொடுத்தால், தாம் மணந்துகொள்வதாக இறைவ ரிடம் அறிவித்தனர். அந்த நிபந்தனையை இறைவரீர் சுந்தரருக்குக் கூறச் சுந்தரர் இறைவரை 'இறைவா நீர் கோயிலில் இருக்கவேண்டா. மூலட்டானத்திற்கு வெளியில் இருக்கும் மகிழ மரத்தடியில் இருந்தால் நான் கோயிலில், வந்து சத்தியம் செய்து விடுகின் றேன்' என்று வேண்டிக் கொண்டார். அவ்வாறே இருப்பதாக இறைவரும் வாக்களித்துத் தாம் மகிழ மரத்தடியில் இருக்கப் போவதையும் சங்கிலியாரிட மும் கூறிவிட்டனர். சங்கிலியாருக்கு இறைவர் கூறி யதைச் சுந்தரர் அறியார். இந்த நிலையில் சங்கிலியார் சுந்தரரை மகிழ மர்த்தடியிலேயே, சத்தியம் செய்யக்