பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

கூற, அந் நிலையில் வேறு வழியின்றிச் சுந்தரர் மகிழ மர்த்தடியில் சத்தியம் செய்துவிட்டனர். இக் காட்சி இன்றும் திருஒற்றியூரில் மாசி மாதப் பெரு விழாவில் மிகச் சிறப்புடன் மகிழடி சேவை என்னும் பெயரில் நடைபெறுகிறது. மக்கள் மகிழடி சேவை என்று சொல்ல அறியாமல், மொழுவடி சேவை என்று மொழிகின்றனர். இந்த நிகழ்ச்சியைத் தான் உருக்கமுடன் சுந்தரர் தமது பதிகத்தில் ஒன்பதாவது பாடலில், பொன்ன விலும் கொன்றையினுய் போய்மகிழ்க்கீழ் இருஎன்று சொன்ன எனக் காளுமே சூளுறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன ஒன்னலரைக் கண்டால்போல் உளோம்போ கீர் என் ருைே:

என்று பாடுகிருர். ஈண்டுப் பொன் நவிலும் கொன்றை என்றது பொன் போலும் நிறமுடைய கொன்றை மலரையே ஆகும். சூளுறவு என்பது சத்தியம். - -

இப் பாடலின் ஈற்றடியில் சுந்தரர் இறைவர் தம்மைப் பகைவர் போல உளோம். டோகீர் என்று கூறிக் கதறி இருப்பதுதான் உள்ளத்தை உருக்க வல்லது. ஒன்னலர் என்பதன் பொருள் பகைவர் என்பது.

இப் பதிகம் முழுவதும் உருக்க உணர்ச்சியையே தரவல்லது. தம்மைப் பற்றிக் கூறும்போது ' நான் தலை கால் தெரியாமல் நடந்து உன்னையே சரணுகக் கொண்டு இருந்தேனே அப்படி இருந்தும், இவன் நம் அடியான். நம்மையே அடைந்து வழிபடுபவன் என்றும் பாராமல் உளோம் போகீர் என்ருனே ' என்றும், "இன்ன செயல் புரிவது என்று அறியாதவ ய்ை இருந்தும், உனது திருவடிகளே அடைக்கலம் என்று இருந்தேனே. நான் பொய் அடியனுக இருந்