பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

ஆதர்கள் என்பவர்கள் கீழ் மக்கள். இவர்கள்

e ੋਂ (ଟ A. * ଛୋ $ * ଈ, o אא அடியார்களே இகழும் இயல்பினர். இதனைத் திரு ஞான சம்பந்தர் அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே " என்று கூறி உணர்த்தி யுள்ளனர்.

இதில் சம்பந்தப் பெருமான் உபதேசித்துள்ள உசதேச மொழிகளும் உண்டு.

ஆச்சியப் பேய்களோ டமனச் குண்டர் பேச்சிவை நெறி அல்ல பேணு மின்கள் மாச்செய்த விளவயல் மல்கு கள்ளில் தீச்செய்த சடைஅண் ணல் திருந் தடியே' என்னும் உபதேசத்தைக் காண்க,

சீர்காழி, திசையுளார் எவராலும் புகழப் படுவது என்பதும், திருஞான சம்பந்தர் நல்ல ஒளியுடையார் என்பதும் ஈற்றுப் பாடலால் அறிய வருவன. திருக் கள்ளில் விளங்கும் இறைவரைப் போற்றினுல் புகழும் பேரின்பமும் வந்து சேரும் என்பது இப்பதிகத்தின் பயணுகும். இக் குறிப்புகளே

திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கும் பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல முகைமேவும் முதிர்சடையன் கள்ளில் ஏத்தப் புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே"

-முத்ல் திருமுறை, என்னும் பாட்டில் காண்க.

ஆச்சியம் . பரிகசிக்கத் தக்க. அமண - சமணர். குண்டர் . பெளத்தர். நெறி - நல்வழி, பேணுமின்கள் . சிவபெரும்:னேயே போற்றுங்கள், மல்கு - பெருகும்.

தீச்செய்த தீயைப்போன்ற திகை . திசை. காழி . சீகாழி, வந்தன் - திருஞானசம்பந்தன். முகை மலர் அரும் பு.