பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 திருக்காளத்தி

இத்தலம் காளத்தி என்றும் வழங்கப் பெறும். இக்கோவிலில் இறைவர் காற்று வடிவாய்த் திகழ் பவர் என்பதை இன்றும் நேரில் கண்டு இன்புறலாம். இதனை மூலட்டானத்து இலிங்கத்தின் அருகே உள்ள விளக்கு எந்த நேரமும் அசைந்து கொண் டிருப்பதன் மூலம் உணரலாம். இத்தலம் தட்ச கையிலாயம் எனப்படும். இது விராட் புருடனது ஆருதார கூேடித்திரங்களில் விசுத்தி கூேஜித்திர மாகத் திகழ்வது என்றும் கூறுவர். இத் தலத்தைச் சீபுரம் என்றும் மும்முடிச் சோழபுரம் என்றும் சொல்லுவர். இத்தலம் ரேணுகுண்டா கூடுர் இரயில் வழியில் இடையே உள்ளது. இரயில்வே ஸ்டேஷன் பெயர் காளாஸ்திரி என்பது. இங்கிருந்து இரண்டு கல் நடந்தால் இத் தலத்தை அடையலாம். இது போது இங்குச் செல்லப் பஸ் வசதிகளும் உண்டு.

இது சீயாகிய சிலந்தியும், காளமாகிய பாம்பும், அத்தியாகிய யானையும் இறைவரைப் பூசித்து முத்தி பெற்ற தலமாகும். இம் மூன்றையும் இறைவர் தம் திருமேனியில் ஒடுக்கிக் காட்சி அளிப்பதை இங் குள்ள சிவலிங்கத் தோற்றத்தின் மூலம் நன்கு உணரலாம். இது குறித்தே இத்தலம் சீகாளத்தி எனப்பட்டது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்பு மூர்த்தி, வெண்ணிற மூர்த்தியும் ஆவார். சுவாமி மேற்கே பார்த்தவண்ணம் உள்ளார். இவருக்குப் பச்சை கற்பூரமும், திருநீறும் கலந்த அபிடேகம் நடை பெறுகிறது.

இத்தலத்தில் விஷ்ணு, பிரம்மா, இலக்குமி, சரசுவதி உரோமேசர், வசிட்டர், வேதருடிகள், ஆதிசேடன், யட்சர், அகத்தியர், திக்குப்பாலகர். யோகினிகள், முசுகுந்தன், கன்னியர் இருவர்,